Tag: Two boys were brutally murdered
-
இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை
10 மற்றும் 17வயதான இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபரும் பலத்த காயங்களுடன் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. என்ன காரணத்திற்காக இந்த படுகொலைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.