Tag: Train traffic affected by power outage!
-
மின் தடையால் ரயில் போக்குவரத்தும் பாதிப்பு!
நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, ரயில்வே கடவைகளில் சமிக்ஞை அமைப்புகளின் செயல்பாட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ரயில் போக்குவரத்தில் சிறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், ரயில் குறுக்கு வீதிகளின் பாதுகாப்பு கடவைகளை செயற்படுத்துவதிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மின் தடை காரணமாக ரயில் நிலையங்களில் அறிவிப்புகள் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.