Tag: #srilankannews

  • கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

    கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

    கிளிநொச்சி (Kilinochchi) இராமநாதபுரம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலக வளாகத்தில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் ரவிச்சந்திரன் என்ற 34 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

  • ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு: இராஜாங்க அமைச்சர் டயானா தெரிவிப்பு
  • நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

    நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

    நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  • முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

    முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

    முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்று (18.04.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த  நபர் தமது வீட்டிலிருந்து தேவிபுரம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியால் சென்ற போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படும் கட்டுத்துவக்கு வெடித்துள்ளது.   இதனால் காயமடைந்த அவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக…

  • கடலில் குழந்தை பிரசவித்த பெண்!

    கடலில் குழந்தை பிரசவித்த பெண்!

    யாழ்ப்பாணம் (Jaffna) – நயினாதீவை (Nainativu) சேர்ந்த பெண்ணொருவர் கடலில் பயணித்தவாறு குழந்தை பிரசவித்துள்ளார். இந்த சம்பவமானது, நேற்றைய தினம் (17.04.2024) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   இதனை தொடர்ந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததன் காரணமாக பொதுமக்கள் பெண்ணை போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி…

  • அமைச்சர் பாலித தெவரபெருமவின் மரணம்!

    அமைச்சர் பாலித தெவரபெருமவின் மரணம்!

    மின்சாரத் தாக்குதலின் காரணமாக உடற்பாகங்கள் அனைத்தும் முற்றாக செயலிழந்ததன் காரணமாகவே முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பிரதி அமைச்சர் பாலித தெவரபெருமவின்(Palitha Thewarapperuma) பிரேத பரிசோதனை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.அத்துடன், அவரது உடல் குடும்ப மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவருடைய குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

  • இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை!

    இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை!

    புதிய வீசா முறைமைய இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய புதிய வீசா முறைமை, பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும் அது தொடர்பான கட்டணங்கள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை 27.11.2023 அன்று விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

  • இலங்கையில் இளம் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்!

    இலங்கையில் இளம் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்!

    மாத்தளையில் கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டு பெண் ஒருவர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.கந்தேநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுனுகல பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், பெண்ணின் சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தேநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • யாழ்.காவல்துறை உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

    யாழ்.காவல்துறை உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

    யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது , பெண்ணின் பூர்வீக…

  • வவுனியாவில் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி

    வவுனியாவில் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி

    அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவை வந்தடைந்த நிலையில், அவருடைய திருவுருவப்படத்துக்கு மக்கள் அஞ்சலி வெலுத்தியுள்ளனர். நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16.04) வவுனியாவை வந்தடைந்துள்ளது. மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வடக்கு – கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளது.