Tag: #srilankannews

  • முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் விளக்கமறியலில்!

    முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் விளக்கமறியலில்!

    திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதான  பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சம்பூர் பொலிசாரினால், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட நால்வரும் இன்றைய தினம் திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40),  பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22),…

  • தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.

    அன்பார்ந்த தமிழீழ மக்களே!                              தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்தியதமிழின அழிப்புப் போரில், 2009 ஆம்ஆண்டு முள்ளிவாய்க்கால் வரைநிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலைசெய்யப்பட்ட மக்களைநினைவேந்திடும்,தமிழின அழிப்புநினைவுநாள் – மே18 இன் பதினைந்தாம்ஆண்டு நிறைவில், வையகம் முழுவதும்பரந்துவாழும் தமிழர்கள்உணர்வெழுச்சியோடு நினைவேந்திடதயாராகும் வலிநிறைந்த காலத்தில் நாம்நின்று கொண்டிருக்கிறோம். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில்> கட்டியெழுப்பப்பட்ட தமிழீழவிடுதலைக்கான மாபெரும்விடுதலைப்போராட்டமாக எமதுபோராட்டம் விளங்குகின்றது. பல்லாயிரக்கணக்கான  மாவீரர்களையும்பல இலட்சக்கணக்கான மக்களையும்ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த, தியாகநெருப்பு இன்னும் சுடர்விட்டுக் கனன்றுதேசவிடுதலையை நோக்கிநகர்ந்துகொண்டிருக்கிறது.   சிங்களப் பேரினவாத அரசிற்குப்பொருளாதார, இராணுவ, தொழில்நுட்பஉதவிகளை வழங்கியதன்காரணமாக, 2009…

  • யாழில். முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு – ஊர்தி பவனியும் ஆரம்பம்!

    யாழில். முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு – ஊர்தி பவனியும் ஆரம்பம்!

    யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.   தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. முன்னதாக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஈகை சுடரும் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் , வீதியில் சென்ற மக்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து , முள்ளிவாய்க்கால் நினைவு…

  • முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது !

    முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது !

    முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் இன்று(12) முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது. அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே கிடைக்கவிடாது தடுத்து உச்சக்…

  • தமிழினப்படுகொலையின் 15வது நினைவேந்தல் நாள் அழைப்பு!

    தமிழினப்படுகொலையின் 15வது நினைவேந்தல் நாள் அழைப்பு!

    15 முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப்படுகொலை உச்சந்தொட்டு இவ்வருடம் 15வது ஆண்டு. ஈழத்தமிழினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலைப்போராட்டத்தின் ஆயுதப் போராட்டப் பரிமாணத்தை பல்வேறு சக்திகளின் துணை கொண்டு சிறீலங்கா அரசு மௌனிக்கச் செய்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. தமிழ்த்தேசியத்தின் நம்பிக்கையில் உறுதி கொண்டு தமிழர் விடுதலைப்போராட்டத்தின் வடிவங்களை மாற்றி தொடர்ந்தும் விடுதலைக்காக ஈழத்தமிழினம் பயணிக்கின்றது என்பது, விடுதலையின் மீது கொண்ட பேரவாவின் பிரதிபலிப்பு. ஈழத்தமிழினத்தின் நீதி வேண்டிய பயணமும், தொடர் போராட்ட முன்னெடுப்புகளும் நீதியின் கதவை எப்போதுமே தட்டிக்கொண்டேயிருக்கப்போகிறது.…

  • இந்தாண்டில் மாத்திரம் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – 27 பேர் உயிரிழப்பு!

    இந்தாண்டில் மாத்திரம் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – 27 பேர் உயிரிழப்பு!

    2024ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.   இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும், 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டுகளில் பெரும்பாலானவை பாதாள…

  • இளைஞனை பொலிஸார் உதைந்து விழுத்தியதில் இளைஞன் உயிரிழப்பு!

    இளைஞனை பொலிஸார் உதைந்து விழுத்தியதில் இளைஞன் உயிரிழப்பு!

    யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை பொலிஸார் உதைந்து விழுத்தியதில், இளைஞன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.   கோப்பாய் தெற்கை சேர்ந்த 41 வயதுடைய  செல்வநாயகம் பிரதீபன் என்பவரே உயிரிழந்துள்ளார். பலாலி வீதியில் கடமையில் இருந்த பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை மறித்த போது, இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது பயணித்துள்ளார். அதனை அடுத்து, பொலிஸ் உத்தியோகஸ்தரும் இளைஞனை தமது மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று, சுன்னாகம்…

  • நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை தேர்தல்ஆணையத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை!

    நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை தேர்தல்ஆணையத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை!

    வணக்கம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவைக்குத்தேர்வு செய்யப்பட்ட அரசவை உறுப்பினர்களின் பெயர்களை இவ்அறிக்கையூடாக மக்களுக்கு அறியத்  தருவதில் தலைமைத்தேர்தல் ஆணையாளர் எனும் வகையில் நான்மனநிறைவடைகிறேன். இவ் விபரங்கள் அந்தந்த நாடுகளில்அமைக்கப்பட்டிருந்த தேர்தல் ஆணையகங்களால் எனக்குஅறியத் தரப்பட்டவையாகும். நாடுகள் வாரியாக உறுப்பினர்கள் விபரம்: ஆஸ்திரேலியா 1. Yogarajah Tharmalingam ​ 2. Kanagasabapathy Sresutharsan 3. Sivarasa Manmatharasa 4. Thillainathan Suthakaran 5. Perinparasa Mukunthan 6. Uthayakumari Suthakaran 7. Kanagandram​Manickavasagar நெதர்லாந்து…

  • நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா தேர்தல் முடிவுகள்!
  • தமிழ் அரசியல்வாதிகளே மண்ணுக்காக வாய் திறங்கள் : முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

    தமிழ் அரசியல்வாதிகளே மண்ணுக்காக வாய் திறங்கள் : முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

    தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது நாடாளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு. கங்கம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். வட மாகாண ஆளுநர் செயலாளருக்கு முன்னால் இன்று(08.05.2024) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது. கொக்கதொடுவாயில் 3 கிராமங்கள் ஆறு…