Tag: #srilankannews
-
யாழ்.மாவட்ட பதிவாளர் நாயக திணைக்கள ஒரு நாள் சேவைகள் நிறுத்தம்!
யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் நாயக திணைக்களத்தில் பிரதியாக்க இயந்திரங்கள் (போட்டோ கொப்பி) பழுதடைந்துள்ளமையால் சேவை பெற செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இயந்திரங்கள் பழுந்தடைந்துள்ள காரணத்தால், திணைக்களத்தில் காணிகளுக்கான தோம்பு மற்றும் உறுதி பிரதிகளை வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. விற்பனைக்கு பிந்திய சேவையில் திருப்தியின்மை. இயந்திரங்களை விற்பனை செய்த நிறுவனங்களே விற்பனைக்கு பிந்திய சேவைகளை வழங்குவதானல். அவர்களே பழுதுகளை சரி செய்ய ஊழியர்களை அனுப்பி வைப்பார்கள். இயந்திரங்கள் பழுந்தடைந்தமை தொடர்பில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்…
-
வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது!
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலம் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வடமாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படகூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் திகதி வரை விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல வேண்டாம். எதிர்வரும்…
-
துரோகி என சொல்வார்கள் என்பதற்காக உண்மையை கூற அஞ்ச மாட்டேன்!
யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் “கடந்த 2005 ஆம் ஆண்டு ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில் கூறியது தொடர்பில், ஊடகவியலாளர்…
-
யாழ். மருத்துவ பீடத்திற்கான புதிய கட்டட தொகுதியை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு சத்திர சிகிச்சை கூடங்களும், ஒரு சத்திர சிகிச்சை கூடமும், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம், மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.…
-
யாழில் இருந்து சென்ற கார் திருகோணமலையில் விபத்து – சிறுமி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் திருகோணமலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார். காரில், சிறுவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறையை சேர்ந்த கணவன் – மனைவி மற்றும் அவர்களது இரு பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை , திருகோணமலை ஈச்சிலம்பற்று பகுதியில் கார் வேக கட்டுப்பாட்டை இழந்து , வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. விபத்தில் கணவன் – மனைவி…
-
யாழில்.வாள் வெட்டில் இளைஞன் படுகாயம்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தொடர்பு பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , வாள் வெட்டு சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் தொடர்பு பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-
கனடாவில் கடலெனத் திரண்ட பெருந்திரளான மக்கள்!
கடலெனத் திரண்ட பெருந்திரளான மக்கள் திரட்சியோடும், நேர்த்தியான ஒழுங்கமைப்போடும், மாபெரும் எழுச்சி நிகழ்வாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கனடாவிலும் அல்பர்ட் கம்பல் சதுக்கத்தில் மே 18, 2024 சனிக்கிழமை மாலை பல்லின மக்களையும் ஈர்க்கும் வண்ணம் வரலாற்றில் பதிவாகியுள்ளது! இவ்வாண்டு தாயக மக்களின் அடக்குமுறைகளைத் தகர்த்துடைத்த பேரெழுச்சியும், உலகெங்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் மாபெரும் எழுச்சியும், தமிழக மக்களின் உணர்வெழுச்சியும் எம் தமிழினத்தின் ஓயாத ஒன்றுப்பட்ட நீதி வேண்டிப் போராடும் வலிமையான செய்தியை உலகிற்கு ஓங்கி…
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றத்தில் கைதான நால்வருக்கும் பிணை!
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உள்ளிட்ட மூன்று பெண்களும் ஒரு ஆணுமாக நான்கு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமையை அடுத்து மன்றின் உத்தரவுக்கமைய 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.…
-
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வருகிறது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையிலும் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் யாழ்ப்பாண விஜயத்தின் போது வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோபூர்வமாக மக்களிடம்…
-
யாழில் போதைப்பொருள் உற்பத்தி மையம் சுற்றி வளைப்பு!
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் உற்பத்தி மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு போதைப்பொருள் உற்பத்தி பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பிரித்தெடுக்கும் உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த வீட்டினை சுற்றி வளைத்துள்ளனர். அதன் போது வீட்டில் இருந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர். அதனை அடுத்து வீட்டினுள் சென்று பொலிஸார் சோதனை…