Tag: #srilankannews
-
முல்லைத்தீவில் சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது !
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் அனுமதியற்ற முறையில் 22 மிசில் லோட் மணல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முக்கிய மணல் ஏற்றும் வியாபாரி ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் நேற்று(28.03.2024) மன்னாகண்டல் மற்றும் பேராற்று பகுதிகளில் இருந்து ஒரு இடத்தில் மணலினை சேகரித்து அதனை டிப்பரில் ஏற்ற முற்பட்ட வேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றும் ஒருவர் தப்பி ஓடியுள்ளதோடு 22 மிசின் லோட் மணல்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஏற்ற முற்பட்ட…
-
ஈஸ்டர் தாக்குதல்! விசாரணைகளுக்கு தடையாக நிற்கும் கோட்டாபய !
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று பலமாதங்களின் பின்னர் அதிபரான கோட்டாபய ராஜபக்ச எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல் இழக்கச்செய்ததே…
-
அரச ஊழியர் ஒருவரின் முகம் சுழிக்கவைக்கும் செயல் !
திருகோணமலை-தொவனிபியவர பகுதியில் ஒன்பது வயது சிறுமிக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ -தெவனிபியவர பகுதியில் வசித்து வரும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 27 ஆம் திகதி சிறுமி தனியாக வீட்டில் இருந்த போது குறித்த நபர் அந்தரங்க உறுப்பை காட்டியதாக தாயாரிடம் கூறியதையடுத்து…
-
சற்றுமுன்னர் மட்டக்களப்பில் கோர விபத்து!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.விபத்தில் சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு…
-
முட்டை இறக்குமதிக்கு தடை !
முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். எனினும், பண்டிகைக் காலங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 இலட்சம் முட்டைகள் நாட்டில் கையிருப்பில் உள்ளதாகவும், இதன் காரணமாக முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
-
தேவாலயங்களிற்கு விசேட பாதுகாப்பு!
நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை மறுதினமும் (31) இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இன்றையதினம் புனித வெள்ளி தினத்தை அனுஸ்டிப்பதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தை கொண்டாடுகின்றனர். அந்தந்த தேவாலய அருட்தந்தைகளுடன் கலந்தாலோசித்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, …
-
மகிந்த வீட்டில் அடிதடி !
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வீட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலின் போது மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டத்தின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர் எரந்த கினிக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. ரணிலின் பிள்ளைகள் போல் செயற்படுவதாக காஞ்சனவை நகைச்சுவையாக எரந்த கினிகே சாடிய நிலையில் கோபமடைந்த அமைச்சர் அவரை தாக்க முயன்றதாக கட்சி…
-
வாழ விடுங்கள் ரொபர்ட் பயஸ் கடிதம் !
எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி சக மனிதனைப் போல வாழ விரும்புவதாகவும் அதற்கு தாங்கள் முழு ஒத்தழைப்பினை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ரொபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு கடந்த 12-11-2022 முதல் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக சிறப்பு முகாமில் ஒன்றரை வருடங்களாக தங்ககவக்கப்பட்டு உள்ளோம். எஞ்சியிருக்கும் இறுதி…
-
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை !
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை என உயர்நீதிமன்ற…
-
கொழும்பில் பாரிய தீ விபத்து !
கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களத்தில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக உள்ள வேல்ஸ்குமார மாவத்தையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.