Tag: #srilankannews

  • விமல் வீரவன்ச விடுதலை!

    விமல் வீரவன்ச விடுதலை!

    முறையற்ற கடவுச்சீட்டை பயன்படுத்தியமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வழக்கு இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு செயலிழந்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வெளிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

  • குறைக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயு!

    குறைக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயு!

    லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று(01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் முன்னிலைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கமைய 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 625 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • தேவாலயத்தில் கத்தியுடன் ஒருவர் கைது!

    தேவாலயத்தில் கத்தியுடன் ஒருவர் கைது!

    நீர்கொழும்பு தேவாலயமொன்றின் நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு கத்திகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது, இன்றைய தினம் ஈஸ்டர் ஞாயிறு தின நிகழ்வுகளின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஆராதனைக்கு வந்திருந்த ஒரு குழுவினருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர் தொடர்பில் கடமையிலிருந்த காவல்துறை புலனாய்வு அதிகாரிக்கு தெரியப்படுத்தியதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்போது, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியை சேர்ந்த நாற்பத்து மூன்று வயதான கந்தசாமி வாகனநாயகம் என்ற சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக…

  • இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரி குறைப்பு !

    இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரி குறைப்பு !

    இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில், 10 சதவீத வரியை 6 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.மேலும், மார்ச் 29 ஆம் திகதி முதல் இந்த வரிக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

  • கார்த்திகைப்பூ வடிவில் இல்ல அலங்கரிப்பு: பொலிஸார் விசாரணை !

    கார்த்திகைப்பூ வடிவில் இல்ல அலங்கரிப்பு: பொலிஸார் விசாரணை !

    யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் (30.3.2024) சனிக்கிழமை நடைபெற்றது. அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டாங்கி வடிவிலும் இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இந்நிலையில், இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி,  ஞாயிற்றுக்கிழமை (31) காலை 9 மணிக்கு பொலிஸ்…

  • எரிபொருள் விலை குறைப்பு!

    எரிபொருள் விலை குறைப்பு!

    இன்று நள்ளிரவு (31) முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 95 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாவாகும். மண்ணெண்ணெய் லீட்டருக்கு 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலை மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

  • கிழக்கில் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ள பிள்ளையான் !

    கிழக்கில் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ள பிள்ளையான் !

    கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்களை மறைத்துவைத்துள்ள பிள்ளையான் குழுவிடம் உள்ள ஆயுதங்களை என்னால் களையமுடியும் என ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபா(R. Praba) பகிரங்கமாக அறிவித்துள்ளார்.கல்லடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஈரோஸ் அமைப்புக்கு அல்லது எங்கள் பத்து உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகள் தருவீர்களானால் கிழக்கு மாகாணத்தினை தூய்மைப்படுத்தி தருவேன் என ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபா பகிரங்கமாக அறிவித்துள்ளார்.  

  • தமிழகத்துக்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள் !

    தமிழகத்துக்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள் !

    மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்குபேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.தனுஷ்கோடி மணல் திட்டில் தரையிறங்கிய இவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த போதைப்பொருட்களின் பயன்பாடு காரணமாக தமது பிள்ளைகளை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் தஞ்சமடைந்ததாக இவர்கள் தமிழக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.  

  • ரணிலுக்கு வால் பிடிக்கும் வியாழேந்திரன் !

    ரணிலுக்கு வால் பிடிக்கும் வியாழேந்திரன் !

    ‘இந்த நாடு உள்ள நிலையில் இன்றைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவே  இந்த நாட்டிற்கு அதிபராக வரவேண்டும் என்பதே சரியானது.முன்னர் இன்றைய அதிபர் தொடர்பில் விமர்சனங்களை செய்தாலும் இன்றைய காலத்தில் அவரின் செயற்பாடே சரியானது” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று(30) மட்டக்களப்பில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்துள்ள…

  • இளைஞர் வெட்டிக் கொலை !

    இளைஞர் வெட்டிக் கொலை !

    காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பயங்கர சம்பவம் லுணுகம்வெஹர, பஞ்சி அப்புஜந்துர பிரதேசத்தில், இன்று(29) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக  லுனுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்