Tag: #srilankannews
-
மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
வாடிக்கையாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் இன்று முதல் சலுகைப் பையை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, 4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பையை 3,420 ரூபா சில்லறை விலையில் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சதொச நிறுவனம் இன்று முதல் ஒரு முட்டையை 36 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு, 9…
-
ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி !
முல்லைத்தீவு – ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவனொருவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம் தமிழ் வித்யாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனுக்கு நேற்று முன்தினம் ஆசிரியர் ஒருவர் தடியால் தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தாக்கப்பட்ட மாணவன் அக்கராயன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
முருகன், பயஸ், ஜெயக்குமார் நாளை இலங்கை வருகின்றனர் !
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இவர்கள் மூவரும் நாளை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்கள் என முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் நளினி உள்ளிட்ட ஆறுபேரும் உயர் நீதிமன்றத்தால் 2022 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
-
ஞானசார தேரரின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த தீர்ப்பானது இன்று (2.4.2024) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகேயால் வழங்கப்பட்டுள்ளது.இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரதிவாதி ஞானசார தேரர் தற்போது விதிக்கப்பட்டுள்ள நான்கு வருட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருப்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில்…
-
இலங்கையில் அதிகரிக்கும் வறுமை விகிதங்கள் : உலக வங்கி சுட்டிக்காட்டு
இலங்கை இன்னும் அதிகரித்த வறுமை நிலைகள், வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் சந்தை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது என்று உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் கடுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் 2024ஆம் ஆண்டில் 2.2வீத மிதமான வளர்ச்சியைக் காணும் என்றும் ஸ்திரத்தன்மையின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
நாட்டில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி !
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என எதிர்வு கூறியுள்ளது.அதேநேரம் அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
-
கட்டுநாயக்கவில் பயங்கர விபத்து!
ராகம பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் பாரவூர்தி ஒன்று தொடருந்துடன் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக தொடருந்து சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
-
வீழ்ச்சியடைந்த அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம் !
கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும் போது(28.03.2024) இன்றையதினம்(01.04.2024)அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி சிறிது உயர்வடைந்துள்ளதுடன், விற்பனை பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (01.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.10 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
-
வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு!
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (31.03.2024) இடம்பெற்றுள்ளது.ஜாஎல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் : மைத்திரி வாக்குமூலம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே செயற்பட்டதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 2019ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா அதிபராக பதவி வகித்த போதே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.அண்மையில் கண்டிக்கு பயணம் செய்திருந்த அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் யார் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக…