Tag: #srilankannews
-
ஜனாதிபதி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல் !
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்கள் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
-
ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி !
வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் நேற்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியர் தாக்கியதாக தெரிவித்துள்ளான். இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு…
-
கணவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய மனைவி!
மதுபோதையில் வந்து மனைவியை நாளாந்தம் அடிக்கும் கணவனை அயலவர்களின் உதவியுடன் மின்கம்பத்தில் கட்டி வைத்து மனைவி உட்பட்ட சிலர் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாத்தறை வெலிகம பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.உயிரிழந்தவர் 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் கணவர், நேற்று இரவு மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். மதுபழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால்…
-
கொழும்பு பிரதான மார்க்கத்தில் தடம்புரண்ட தொடருந்து!
மருதானை மற்றும் தெமட்டகொடை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவலை இலங்கை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதனால் பிரதான தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மஹோ நோக்கி பயணித்த தொடருந்து தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் கடந்த சில காலமாக நிலவி வரும் நிதி நெருக்கடி காரணமாக அதனை விற்பனை செய்வதற்கான விலைமனுக்களை கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
-
விசாரணை முடிந்து தாயகத்திற்க்குள் கால் வைத்த மூவர்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசாரணை இடம்பெற்றது பின்னர் இரண்டு மணித்தியாலங்களின் பின்பு விசாரணை முடிவுற்றதும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர்.
-
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு நீதிமன்றில் விதிக்கப்பட்ட உத்தரவு !
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதி கூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை என பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு எதிராக ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் பி.ஆர.ஐ ஜெமில் முன்னிலையில்…
-
யாழில் இன்று முதல் புதிய நடைமுறை !
—
by
யாழ். மாவட்டத்தில் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இது இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக யாழ். மாவட்ட மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார் அத்துடன், நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-
யாழில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் பறிமுதல்!
யாழ். சாவகச்சேரிப்(Chavakachcheri) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டள்ளன. உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற குறித்த வாகனங்களின் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ-கோவிலாக்கண்டிப் பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் ஒன்றையும் – அதன் சாரதியையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
-
இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமாரிடம் விசாரணை !
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர்.