Tag: #srilankannews
-
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கை இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ். சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீர்கொழும்பு நீதவான்…
-
யாழில் சேகம்: காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் (8) இரவு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் சிறீரங்கநாதன் மதுமிதா எனும் 16 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.கடந்த 7ஆம் திகதி மாணவிக்கு இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் காலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படட நிலையில் அன்றிரவே உயிரிழந்துள்ளார். யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார்…
-
வவுனியாவில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் கடந்த 3 ஆம் பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் மாணவனின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.…
-
வவுனியாவில் பேருந்து விபத்து : மாணவன் படுகாயம்!
வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவனை பேருந்து மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (08.04.2024) காலை இடம்பெற்றுள்ளது.பத்தினியார் மகிழங்குளம் நோக்கி வந்த பேருந்து அதே திசையில் புதுக்குளம் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை மோதியதிலேயே மாணவன் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
15ஆம் திகதி அரச பொது விடுமுறையா?
எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையில் அரச பொது விடுமுறை தினமாக மாற்றுவது தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக மாற்றுவது தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு உதயமாகும் நிலையில், ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை வழக்கமான வேலை நாளாக காணப்படுகிறது. எனினும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. இவ்வாறு விடுமுறை தினமாக…
-
பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு!
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இன்று (08.04.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருட பிறப்பை முன்னிட்டு இந்த விலை குறைப்பை லங்கா சதொச நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 300யினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 850 ரூபாவாகும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.…
-
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கையில் (Sri Lanka) அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது. இந்த சம்பளத்தில் 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட, அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர் கொடுப்பனவும் உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதலாக ஒவ்வொரு பணியாளருக்கும் 10,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது!
வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் ஒன்று மாணவனை தாக்கிய ஆசிரியை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07.01.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவன் கடந்த 03ஆம் திகதியன்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் மாணவனின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.…
-
துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!
இரத்தினபுரி – மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். உயிரிழந்த இருவரும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளனர்
-
மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த நாட்களில் மதுபானசாலைகளை மூட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது