Tag: #srilankannews

  • பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

    பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

    முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளைய தினம் (17.4.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.

  • முக்கிய அரச நிறுவனங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி

    முக்கிய அரச நிறுவனங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி

    நாட்டின் முக்கியமான அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் கல்விச் செயலளார் புபுது ஜாகொட இந்த குற்றச்சாட்டைச் முன்வைத்துள்ளார். புத்தாண்டில் அரசாங்கம் முதல் பணியாக அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

  • தமிழரசு கட்சியில் மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை!

    தமிழரசு கட்சியில் மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை!

    ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சிக்கு இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின்  தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத்துத் தெரிவிக்கையில், தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி…

  • சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையங்கள்!

    சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையங்கள்!

    அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவினுள் சட்டவிரோதமாக இயங்கிய 3 போலி மருத்துவ நிலையங்கள் உட்பட அதன் இயக்குநரான போலி வைத்தியரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின்போது சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை…

  • வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை!

    வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை!

    வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் பொருளாதாரம் இன்னும் நல்ல நிலையில் இல்லை என  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார். மேலும், சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணத்தினால் நாட்டின் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் தான் இருப்பதாகவும்  பேராசிரியர் பிரியந்த துனுசிங்க சுட்டக்காட்டியுள்ளார்.

  • யாழில் கோவிட் தொற்றால் வெளிநாட்டில் இருந்து வந்த பெண் உயிரிழப்பு!

    யாழில் கோவிட் தொற்றால் வெளிநாட்டில் இருந்து வந்த பெண் உயிரிழப்பு!

    யாழ். மாவட்டத்தில்  நீண்ட காலத்திற்கு பின்னர் கோவிட் தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ்  நாட்டில் இருந்து வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கோவிட் உயிரிழப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு வந்த 62 வயதான பெண் கோவிட் (COVID 19) கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

  • 14 வயது மாணவியை கடத்திய 17 வயது இளைஞன்!

    14 வயது மாணவியை கடத்திய 17 வயது இளைஞன்!

    14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞன் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கை இன்று (15.04.2024) காலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தை சேர்ந்த மேற்படி மாணவியை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்ற திருகோணமலை  குச்சவெளியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் கொழும்பில் சில நாட்கள் அவருடன் தங்கியிருந்துள்ளார். அதனையடுத்து, மீண்டும் நேற்று சொந்த இடம் திரும்பி வீட்டில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல்…

  • வவுனியாவில் பேருந்து சாரதி கைது!

    வவுனியாவில் பேருந்து சாரதி கைது!

    வவுனியாவில் (Vavuniya) மதுபோதையில் தனியார் பேருந்தினை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்து பொலிஸாரினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதுடன் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வவுனியா மாவட்டத்திலும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, மதுபோதையில் வாகனத்தினை செலுத்திய குற்றச்சாட்டில்…

  • புத்தளத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

    புத்தளத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

    புத்தளம் – மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 56 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மஹகும்புக்கடவல கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்த…

  • யாழ். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலய விசேட பூஜை!

    யாழ். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலய விசேட பூஜை!

    குரோதி வருடப்பிறப்பை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.விசேட பூஜை வழிபாடுகள் இன்று (14.4.2024) காலை நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.பூஜைகளை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி வலம் மற்றும் வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.யாழ்ப்பாணத்திலுள்ள இந்து ஆலயங்களில் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சிறப்பு நாட்களில் வழிபாட்டு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பது வழக்கம். அதேபோன்று , இன்று மலர்ந்துள்ள சித்திரை வருடப்பிறப்பு வழிபாட்டுக்கு பல…