Tag: #srilankannews
-
யாழில். ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் – வாகனங்களுக்கும் தீ வைப்பு!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் அடங்கிய வன்முறை கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, தாக்குதலை…
-
மந்திகை வைத்தியசாலையில் வைத்தியர் உயிர்மாயப்பு!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.குறித்த சம்பவம் இன்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலையில் நடந்தது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
-
புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ள வேண்டும்!
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc – Andre Franche ) உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், வட மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர் (காணி ), மாகாண காணி ஆணையாளர் மற்றும் யாழ்…
-
வவுனியாவில் பொலிஸ் வாகனம் விபத்து!
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது. வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர் சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு என்பவற்றை சேதப்படுத்தியுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கொட்டகையில்…
-
தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றல்ல!
ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்தி வாக்களிக்க கோருவதும் ஒன்றல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது கொள்கை ரீதியாகப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற நிலையை ஏற்கனவே எடுத்திருந்தாலும் இந்தக் கூட்டணியில் இருக்கக்கூடிய ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ போன்ற கட்சிகள்இந்த விடயத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்…
-
அச்சுவேலியில் வீடொன்றுக்கு தீ வைப்பு – 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அட்டகாசம்!
யாழ்ப்பாணத்தில் 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல் ஒன்று பண்ணை வீடொன்றின் மீது, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதலை மேற்கொண்டு , தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். அச்சுவேலி , கைத்தொழில் பேட்டையில் உள்ள பண்ணை ஒன்றினுள் காணப்பட்ட வீடொன்றின் மீதே குறித்த வன்முறை கும்பல் தாக்குலை மேற்கொண்டுள்ளது. குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞன் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை…
-
யாழ்.நூலகம் முன்பாக மெழுகுவர்த்திகள ஏந்தி நினைவேந்தல்!
யாழ் நூலக எரிப்பின் 43 ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு , இன்றைய தினம் சனிக்கிழமை மாலை நூலகம் முன்பாக மெழுகுவர்த்திகள ஏந்தி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
-
படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல்!
படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது யாழ்ப்பாணம் பிரதான வீதி, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பொது நினைவுத்தூபியில் இவ் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுருவபடத்திற்கு, உதயன் குழும தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவனால்…
-
யாழில். நூலக எரிப்பு தொடர்பான ஆவணப்படம் திரையிடல் – அரசியல் பேச தடை விதித்த மாநகர சபை!
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணப்படத்தினை பொது நூலக கேட்போர் கூடத்தில் திரையிட அனுமதி வழங்கும் போது, அரசியல் பேச கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த ஆவண படத்தினை கடந்த 17 வருட காலமாக நூலக கேட்போர் கூடத்தில் திரையிடுவதற்கான முயற்சிகளை பல தரப்பினரும் முன்னெடுத்து வந்த நிலையி அது சாத்தியமாகவில்லை. இந்நிலையில், யாழ்.சிவில் சமூக நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியில் , ஆவணப்படத்தினை திரையிட அனுமதி வழங்கிய மாநகர சபையினர்…
-
ஜூன் மாத நடுப்பகுதியில் யாழுக்கு குடிநீர்!
யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்தின் ஆரம்ப பணிகள் ஜூன் மாத நடுப்பகுதியில் முற்றுப்பெறும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை பிரதானமாக காணப்படுகிறது அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜூன் மாத நடுப்பகுதியில் குடிநீர் விநியோகத்திற்கான ஆரம்ப பணிகள் முற்று பெறும் என நம்புகிறேன் என தெரிவித்தார் .