Tag: #canadanews
-
நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்!
Jacob Arulrajah Yogendran Vaiseegamagapathy Mariajerom Mariyanayagam Jeyathasan Kurukularajah Reginald Nagarajah Shweta Uthayakumar Kalaichelvi Sivasubramaniam Joseph PAntony Cynthia Sri Pragash Shanthini Sivaraman Sudesh Suren Mahendran Wasanthaa Rohini Devi Karuppiah Gopalakrishnan Arumugam Navaneshan Murugandy Sivani Ramesh Vijitharan Varatharajah Kumuthini Kunaratnam Thaninayagam Shanmuganathan Jeyameera Karthick Ravichandran Mathy Mahalingam NONE Kandasamy Sooriyakumaran Gupenthiran Mahalingam
-
கனேடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
கனேடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக அதிகரித்திருந்தது. மேலும், கடந்த பெப்ரவரி மாதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 வீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரியளவு மாற்றங்கள் பதிவாகாது என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20 துறைகளில் 12 துறைகளில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக…
-
கெஹெலியவிற்கு மீண்டும் நீடிக்கப்பட்ட விளக்கமறியல்!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) உள்ளிட்ட 9 சந்தேகநபர்களும் தரமற்ற ஊசி மருந்துகளை இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் எதிர்வரும் மே மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று (22.04.2024) மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மாளிகாகந்த நீதவான் லோசினி அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி முன்வைத்த பிணை கோரிக்கை அங்கு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-
கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
கனடாவிற்கு வரும் புதிய குடியேற்றவாசிகளுக்கான முக்கியமான அம்சங்களில் ஒன்று, அவர்கள் எந்த நகரத்தில் குடியேறுவது சிறந்தது என்பதை தீர்மானிப்பது. அதன்படி, அவை வேலை வாய்ப்புகள், அத்தியாவசிய சேவைகள், பல்வேறு கலாச்சார சலுகைகள் மற்றும் வலுவான சமூக உறவுகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. இந்நிலையில் கனடாவிற்கு புலம்பெயர உள்ளவர்கள் குடியேற சிறந்த பத்து நகரங்களின் பட்டியலொன்றை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.குறித்த பட்டியலில் உள்ளடங்கும் நகரங்களும் மாகாணங்களும் பின்வருமாறு, 1. ரொறன்ரோ – ஒன்டாரியோ மாகாணம் 2. வான்கூவர் – பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணம்…
-
வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வழிப்பறி!
வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் முகமூடியணிந்த மூவரால் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதன்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்து கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவமானது, இன்று (17.04.2024) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சிறு குழந்தை ஒன்றின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி இவ்வாறு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
-
பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில்!
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணிலைக்(Ranil Wickremesinghe) களமிறக்குவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில்(Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைகளை மாற்றியதில்லை. ஆட்சியை இழந்தாலும் தனது கொள்கைகளை கடைப்பிடித்தார். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வரவும் உழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இம்முறை கட்சி சார்பற்ற…
-
யாழ். நகரப் பாடசாலையில் மாணவர்களுக்கு காசநோய்!
யாழ்ப்பாணம் (Jaffna) நகரத்திலுள்ள ஆண்கள் பாடசாலை மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்வி பயிலும் மாணவனுக்கு உடல் மெலிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த மாணவனுக்குக் காசநோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய மாணவர்கள் சிலரைப் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில், அவர்களுக்கும் காசநோய் இருப்பது தெரியவந்துள்ளது.
-
குறைக்கப்படவுள்ள விசிட்டர் வீசா!
கனடா செல்லும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.தற்காலிக விசாவில் நாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு கனடாவின் மக்கள் தொகையில் 2 சதவீதமானவர்களே தற்காலிக குடியேறியவர்களாகும்.கனேடிய மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் தற்காலிகமாக குடியேறியவர்களாகும்.இது நாம் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டிய ஒன்றென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வருடத்தில் விசிட்டர் விசாவில் இலங்கையர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் கனடாவுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை…
-
பாடசாலையில் இலவச மதிய உணவுதிட்டம் !
பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகளுக்காக மதிய உணவு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நேற்றிலிருந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் தொடக்கம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவோம், பள்ளிக்கு வரும் ஒரு பிள்ளை, எனக்கு பசிக்கிறது என்று கூறுமானால், பள்ளி என்னும் சமுதாயம் மற்றும் நாடு என்னும் முறையில், நாம் எல்லோரும் செய்யவேண்டிய வேலை இன்னமும் நிறைய இருக்கிறது என்று பொருள் என்று…
-
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் கனடா !
2024 ஆம் ஆண்டில் மகிழ்ச்சியான G7 நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.இந்த ஆண்டுக்கான குறித்த தரவரிசையை WHR (World Happiness Report) வெளியிட்டுள்ளது. G7 நாடுகளின் ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியின் அடிப்படையில், எல்லா வயதினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டதாகும். G7 நாடுகள் பட்டியலில் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில், பின்லாந்து முதல் இடத்தைப் பிடிக்க…