Tag: #breakingnews

  • வாகனங்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!

    வாகனங்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!

    இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை படிப்படியாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறுதியான வாகன இறக்குமதியின் போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 3 வருடங்களை 7 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • பொத்துவில் கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்!

    பொத்துவில் கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்!

    அம்பாறை(Ampara) பொத்துவில் பகுதியில் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இன்று(20.04.2024) இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த சிறுவன் கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

  • அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய இணைய வழி வீசா!

    அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய இணைய வழி வீசா!

    இணைய வழியான புதிய வீசா முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கப்பல் மார்க்கமாக இலங்கை வரும் பயணிகளுக்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு இந்த இணைய வழியான புதிய வீசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகம் நிமல் குணவர்தன தெரிவித்துள்ளார்.இதற்காக 25 டொலர் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் கைது!

    கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் கைது!

    கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) இரண்டு கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (20.04.2024) போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இரு பெண்களிடமும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதை மாத்திரைகளை உடலில் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

  • இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் கடுமையாகும் சட்டம்

    இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் கடுமையாகும் சட்டம்

    இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் மோசடி செய்யும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். சுற்றுலா பயணிகளிடம் அதிகளவான கட்டணங்கள் அறவிடும் ஆட்டோ சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

  • இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

    இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

    இலங்கையில் பாடசாலை மாணவர்கள்   நீரிழிவு நோயினால் (Diabetes) பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய எதிர்வரும் நாட்களில் விசேட கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் (Sherin Balasingham ) தெரிவித்துள்ளார். நீரிழிவு நோய் (Diabetes) பாதிப்பு குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட சோதனையில் உடல் பருமன், உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமை ஆகிய இரண்டு காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான…

  • கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

    கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

    கிளிநொச்சி (Kilinochchi) இராமநாதபுரம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலக வளாகத்தில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் ரவிச்சந்திரன் என்ற 34 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

  • ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு: இராஜாங்க அமைச்சர் டயானா தெரிவிப்பு
  • நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

    நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

    நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  • முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

    முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

    முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்று (18.04.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த  நபர் தமது வீட்டிலிருந்து தேவிபுரம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியால் சென்ற போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படும் கட்டுத்துவக்கு வெடித்துள்ளது.   இதனால் காயமடைந்த அவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக…