Tag: #breakingnews

  • கெஹெலியவிற்கு மீண்டும் நீடிக்கப்பட்ட விளக்கமறியல்!

    கெஹெலியவிற்கு மீண்டும் நீடிக்கப்பட்ட விளக்கமறியல்!

    முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) உள்ளிட்ட 9 சந்தேகநபர்களும் தரமற்ற ஊசி மருந்துகளை இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் எதிர்வரும் மே மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று (22.04.2024) மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மாளிகாகந்த நீதவான் லோசினி அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி முன்வைத்த பிணை கோரிக்கை அங்கு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

    கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

    கனடாவிற்கு வரும் புதிய குடியேற்றவாசிகளுக்கான முக்கியமான அம்சங்களில் ஒன்று, அவர்கள் எந்த நகரத்தில் குடியேறுவது சிறந்தது என்பதை தீர்மானிப்பது. அதன்படி, அவை வேலை வாய்ப்புகள், அத்தியாவசிய சேவைகள், பல்வேறு கலாச்சார சலுகைகள் மற்றும் வலுவான சமூக உறவுகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. இந்நிலையில் கனடாவிற்கு  புலம்பெயர உள்ளவர்கள் குடியேற சிறந்த பத்து நகரங்களின் பட்டியலொன்றை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.குறித்த பட்டியலில் உள்ளடங்கும் நகரங்களும் மாகாணங்களும் பின்வருமாறு, 1. ரொறன்ரோ – ஒன்டாரியோ மாகாணம் 2. வான்கூவர் – பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணம்…

  • திறக்கப்படவுள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிராக போராட்டம்!

    திறக்கப்படவுள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிராக போராட்டம்!

    யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(22.04.2024) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலை திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலையில் மதுபான விற்பனை நிலையத்தை கொண்டு வருவதால் இளம் சந்ததியினர் வழி தவறிப் போகக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு பிரதேச மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • இன்று இடம்பெற்ற கோர விபத்து: ஸ்தலத்தில் ஏழு பேர் பலி!

    இன்று இடம்பெற்ற கோர விபத்து: ஸ்தலத்தில் ஏழு பேர் பலி!

    தியதலாவ பகுதியில் பாரிய விபத்தொன்றில் ஏழு பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (21) சற்று முன்னர் இடம்பெறுள்ளது.மேலும் இந்த விபத்தில் மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இடம்பெற்ற காரோட்ட பந்தய போட்டியின் (Fox Hill Super Cross – 2024 ) போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

  • அதிகரிக்கும் வெப்பம்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

    அதிகரிக்கும் வெப்பம்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

    இலங்கையின் பல பகுதிகளில் நாளை (22) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு வெப்பம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

  • மூடப்படும் மதுபானசாலைகள்!

    மூடப்படும் மதுபானசாலைகள்!

    பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 23ஆம் திகதி மதுபானசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் மே 22, 23, 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!

    வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!

    எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். டொலர் கையிருப்பு அதிகரிப்பு மற்றும் ரூபாவின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ருவன்வெல (Ruwanwella) பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  

  • இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை!

    இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை!

    ஐந்தாண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் பொதுமக்களுக்கு எதிரான மிக மோசமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட 279 பேர் விடயத்தில், “பொறுப்புப் பற்றாக்குறையை” சரிசெய்து நீதியை வழங்குமாறு, ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு யார் காரணம் என்பதை தீர்மானிக்க “முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை” நடத்தப்பட வேண்டும் என்று நாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட தூதுவரான Marc-Andre Franche கொழும்பில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் வலியுறுத்தினார். குறித்த…

  • வெளிநாட்டு பெண் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது!

    வெளிநாட்டு பெண் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது!

    போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை  நுவரெலியா – டொபாஸ் பகுதியில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் நுவரெலியா (Nuwara Eliya) குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வேன் ஒன்றை சோதனையிட்ட போது, ​​19 கிராம் குஷ் போதைப்பொருளும், 03 கிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  • கொழும்பில் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

    கொழும்பில் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

    கொழும்பு(Colombo) குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கட்டானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை நேற்று(19.04.2024) ப்ளுமென்டல் பொலிஸ் பிரிவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, இவரிடமிருந்து 800 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.