Tag: #breakingnews
-
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து!
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகளின் செயற்பாடுகளை உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில் பயணங்களின் போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிதிபலகையில் பயணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் உயிராபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மலையகத்திற்கான ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளே இவ்வாறு செயற்படுகின்றனர்.சுற்றுலாப் பயணிகள் தங்களின் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் ஃபுட் போர்டில் ஏறி செல்ஃபி எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், அண்மைக்காலமாக பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டடுகின்றனர்.
-
திருகோணமலையில் விபத்து: பாடசாலை மாணவி படுகாயம்!
திருகோணமலை (Trincomalee) தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்றையதினம் (23.04.2024) குறித்த மாணவி வீதியை கடக்க முற்பட்ட போது வான் ஒன்று மோதியதால் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கண்டியை (Kandy) சேர்ந்த 32 வயதுடைய வான் சாரதி திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
-
வெடுக்குநாறி மலை விவகாரம்: பொலிஸார் மற்றும் வனவளத் திணைக்களத்திடம் விசாரணை!
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிஸார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு இன்று (24.04.2024) அழைக்கப்பட்ட நெடுங்கேணிப் பொலிஸார் , வனவளத் திணைக்களத்தினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வாக்கு மூலமும் பெறப்பட்டுள்ளது.
-
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனம்!
கிளிநொச்சி (Kilinochchi) மேல் நீதிமன்றத்தின் இரண்டாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக எ.ஜி. அலெக்ஸ்ராஜா (A.G. Alexraja) நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இன்றையதினம் (24.04.2024) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அதேவேளை, கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தின் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய ஏ.எம்.எம். சஹாப்தீன் இன்று முதல் யாழ்ப்பாணம் (Jaffna) குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.
-
சிவனொளிபாதமலையில் காணமல்போன இளைஞன் உயிருடன் மீட்பு!
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில் மலையில் உச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்த இளைஞன் மூன்று நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிவனொளிபாத மலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லதன்னி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் இன்று (24) காலை இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டு தோட்ட தொழிலாளர்கள் குழுவினால் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
-
போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரச அதிகாரி கைது!
அம்பாறையில் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
-
பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் செய்தி!
தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. இந்த போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை…
-
நீதிபதி இளஞ்செழியனிற்கு யாழ் மேல் நீதிமன்றம் அழைப்பாணை!
நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கு நீதிபதி இளஞ்செழியனுக்கு அழைப்பு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றம் இந்த அழைப்பு கட்டளையை பிறப்பித்துள்ளது.இதன்படி நாளை(24.04.2024) புதன்கிழமை நீதிமன்றில் சாட்சியம் அளிக்க முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த 22.07.2017 அன்று நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
-
தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள்!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையின் மட்டக்களப்பு (Batticaloa) பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், கஜேந்திரன் மற்றும் அவரது எட்டு வயது மகன் உள்ளிட்ட 3 நபர்கள் தனுஷ்கோடிக்கு அடுத்த ஐந்தாம் மணல் தீடையில் இன்று (22) காலை தஞ்சம் அடைந்துள்ளதாக இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்
-
சமூக வலைத்தளங்கள் மூலமாக பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!
காலியில் (Galle) சமூக வலைத்தளங்கள் ஊடாக கடன் பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (22) மாத்தறை (Matara) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார். இமதுவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.