Tag: #breakingnews

  • யாழில் பாரிய காணி மோசடி – அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்!

    யாழில் பாரிய காணி மோசடி – அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்!

    யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியே இவ்வாறு மோசடியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியை பராமரிக்கும் நோக்கில் உறவினர் ஒருவரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. குறித்த காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய…

  • யாழ். வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது!

    யாழ். வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது!

    யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (25.04.2024) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்று கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி…

  • மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் தனியாருக்கு!

    மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் தனியாருக்கு!

    மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம் இந்தியாவின் ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவட் லிமிடட் (Shaurya Aeronautics Pvt. Ltd) நிறுவனத்திடமும் ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜன்ஸ் மெனேஜ்மன்ட் (Airports of Regions Management Company) நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்படவுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி 09ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மத்தளை விமான நிலையத்தை வாங்குவதற்காக, விருப்பம் தெரிவிப்பு…

  • ருமேனியாவுக்கு ஆட்கடத்தல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!

    ருமேனியாவுக்கு ஆட்கடத்தல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!

    போலி ஆவணங்கள் மற்றும் போலி முத்திரைகளைப் பயன்படுத்தி ருமேனியாவில் இளைஞர்கள் குழுவொன்றை வேலைக்கு அனுப்ப முயற்சித்த நபரை விமான நிலையப் பணியகப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக, ருமேனியாவிற்கு வேலைக்குச் சென்ற ஐந்து இளைஞர்கள் ஆவணங்களைச் சரிபார்த்த போது ஏமாற்றப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டனர். இதன் பின்னர், பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப்…

  • ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!

    ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!

    ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது கட்சி, நிற பேதங்களை களைந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அவர்கள் இவ்வாறு ஊடகங்களிடம் கூறியதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  • நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கு: மன்றில் இல்லாமல் போன சாட்சியம்!

    நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கு: மன்றில் இல்லாமல் போன சாட்சியம்!

    நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் , நேற்றையதினம்(25) நடைபெற்றது. அதன் போது , நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக அக்காலத்தில்…

  • இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம்பெயர் தமிழர்களின் திடீர் முடிவு!

    இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம்பெயர் தமிழர்களின் திடீர் முடிவு!

    இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார். மேலும் கூறுகையில், இலங்கையிலிருந்து மிக பெரிய எண்ணிக்கையிலான தொழில்வாண்மையாளர்களும் கல்வி கற்றவர்களும் வெளியேறியுள்ளனர்.இப்போதும் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வேறு நாடுகளுக்கு சென்றவர்கள் தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்பும் போது இலங்கையில் வெளிநாட்டு பணங்களின் புழக்கம் அதிகரிக்கும் நிலை தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.

  • நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை – நீதிபதி இளஞ்செழியன் விசனம்!

    நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை – நீதிபதி இளஞ்செழியன் விசனம்!

    நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். நல்லூர் சந்தியில் நீதிபதியின் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக வழக்கு தொடர்பில் சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை இன்று (25.4.2024) யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மேல் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எஸ்.சூசைதாஸன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

  • கொழும்பில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்!

    கொழும்பில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்!

    இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு பெறுமதியான இரத்தினக் கற்களை தருவதாகக்கூறி ஐம்பது மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல இன்று (25) உத்தரவிட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த மொஹமட் மபாஸ் இட்டிகார் என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

  • வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது!

    வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது!

    வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது இன்று (25.04.2024) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1000 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் இவை விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா போன்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.