Tag: #breakingnews

  • நாளை யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள எரிக் சொல்ஹெய்ம்!

    நாளை யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள எரிக் சொல்ஹெய்ம்!

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) தற்போதைய சர்வதேச காலநிலை ஆலோசகரும் முன்னாள் நோர்வே வெளி விவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம்(Erik Solheim) மற்றும் நோர்வே நாடாளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இருவரும் நாளை (30.04.2024) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.யாழ்ப்பாணம் அல்லப்பிட்டியில் அமைந்துள்ள தப்ரபேன் நிறுவனத்தின் கடல் உணவு தொழிற்சாலைக்கு இவர்கள் விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • க.பொ.த சாதாரணதர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

    க.பொ.த சாதாரணதர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

    கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (26.04.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை தேர்வு மே இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என…

  • யாழ். வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது!

    யாழ். வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது!

    வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (25.04.2024) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்று கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதுடன்…

  • எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறை!

    எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறை!

    எரிசக்தி துறைக்கான புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் எண்ணெய், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு, மசகு எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சுத்திகரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் இயங்கினாலும், அதற்கான விரிவான ஒழுங்குமுறை வழிமுறை எதுவும் இல்லை. தனியார் நிறுவனங்கள் பலவும் பெட்ரோலிய…

  • வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

    வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

    மினுவாங்கொடை நீதிமன்றத்தினால் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வர்த்தகர் ஒருவர் தாய்லாந்துக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்கவிற்கு வந்த போது குடிவரவு திணைக்களத்தின் எல்லை அமுலாக்கப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதான வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் அதிகாலை 01.08க்கு தாய்லாந்தின் பேங்கொக் நகருக்குப் புறப்படவிருந்த தாய் எயார்வேஸ் விமானமான TG-308 இல் ஏறுவதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது வர்த்தகர் விமான…

  • வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையிட்ட மூவர் கைது!

    வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையிட்ட மூவர் கைது!

    வவுனியாவில்(Vavuniya) குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் நகைகளை கொள்ளையிட்ட மூவரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு கடந்த 17 ஆம் திகதி அதிகாலை குறித்த பெண் தனது குழந்தையுடன் மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது வீதியில் முகத்தை துணிகளால் கட்டியபடி நின்ற மூன்று இளைஞர்கள் குறித்த பெண்ணை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த…

  • மக்களின் வங்கி கணக்குகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

    மக்களின் வங்கி கணக்குகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

    நாட்டில் வங்கிக் கணக்குகளில் சுமார் 60 வீதமான வங்கிக் கணக்குகளின் மீதி 5000 ரூபாவிற்கும் குறைவானது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை, வரிச் செலுத்துவதனை தவிர்க்கும் நபர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு தடை விதித்த இலங்கை அரசு!

    அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு தடை விதித்த இலங்கை அரசு!

    அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் செல்லும் ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது என அரசாங்கம் எடுத்த கொள்கைத் தீர்மானத்திற்கு அமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் எல்லையை பயன்படுத்தாமல், எரிபொருள், நீர் சுத்திகரிப்பு, உணவு மற்றும் இதர வசதிகளை பெற அமெரிக்க ஆய்வு கப்பல் அனுமதி கோரியதால், சர்வதேச கடல் எல்லைக்கு சென்று அதற்கான வசதிகளை செய்து…

  • வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி!

    வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி!

    இலங்கையின் வடக்கு – கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வவுனியா வெடுக்குநாறி மலைக் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் கிரேடி (Patrick Grady) கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளிக்கும்போதே, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன் (Anne-Marie Trevelyan)இதனை தெரிவித்துள்ளார்.

  • வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு!

    வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு!

    தனியார் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தனியார் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.