Tag: #breakingnews
-
கொழும்பில் பாரிய தீ விபத்து !
கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களத்தில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக உள்ள வேல்ஸ்குமார மாவத்தையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
சிவலிங்கம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பௌத்த தேரர்கள் ஆர்ப்பாட்டம்!
திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பௌத்தப்பிக்கு ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சார்பாக குரல் எழுப்பும் விதத்தில் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். கடந்த காலங்களில் திமுதுகம கரடிபுல் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு…
-
நான் விரைவில் கொலைசெய்யப்படலாம்! அருட்தந்தை வாக்குமூலம் !
கடந்த திங்கட்கிழமை அருட்தந்தையர்களுக்கான விசேட திருப்பலி ஒன்று ஆயர் தலைமையில் மட்டக்களப்பு ஆயரில்லத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் அருட்தந்தை ஒருவர் தனக்கு ஆயரில்லத்தில் உள்ள சிலரால் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் அச்சுறுத்தல் குறித்து அருட்தந்தையர்கள் மத்தியில் ஆதங்கப்பட்டதுடன் என்னை துப்பாக்கி முனையில் கொலை செய்யப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அருட்தந்தை கருத்து தெரிவித்த காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது, அந்த காணொளியில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் என் மீது குரோத உணர்வை கொண்டுள்ளதுடன், மறைமாவட்டம்…
-
இராணுவ சேவையின் கீழ் முல்லைத்தீவு ஓட்டுத்தொழிற்சாலை !
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள ஓட்டுத்தொழிற்சாலை போரிற்கு பின்னர் இயங்காத நிலையில் தற்போது இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. போருக்கு முன்னர் விடுதலைப்புலிகள் காலத்தில் பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிற்சாலையாக ஓடு,செங்கல் என்பன இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அருகில் உள்ள கூழாமுறிப்பில் களிமண் எடுக்கப்பட்டு அங்கு உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் போரிற்கு பின்னர் அந்த தொழிற்சாலை எந்த நடவடிக்கையும் அற்ற நிலையில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் தங்கள் அரசியலுக்காக பல அமைச்சின் கீழ்…
-
உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட அறிவித்தல் !
தேவாலயங்களுக்கு வரும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். தவக்காலத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களிலும் தற்பொழுது பல ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வரும் புதியவர்கள் அல்லது அடையாளம் தெரியாதவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
மீண்டும் தமிழ் இளைஞர்களை துரத்தும் சி.ஐ.டி !
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு தொடர்ச்சியாக அழைக்கப்படுவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஓமந்த பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர், ஆறு வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருக்கும் தமது மகனை குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளமையால் அச்சமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வசிக்கும் வவுனியா ஓமந்த பகுதியைச் சேர்ந்த…
-
கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !
முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று கேப்பாப்புலவு இராணுவ படை தலைமையத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ள நிலையிலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இராணுவ முகாமிற்கு இராணுவ தளபதி நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையிலே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி அதிபருக்கும், முல்லைத்தீவு…
-
ராஜீவ் காந்தி கொலை விவகாரம்! 7 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மூவர் !
இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 7 பேரில் மூவரான முருகன்,ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(26) தமிழக அரசு சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன்,…