Tag: #breakingnews
-
290 ரூபாவை நெருங்கும் அமெரிக்க டொலர்!
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(05.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (05.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.28 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 225.59 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது
-
புத்தாண்டில் அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம்!
தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
-
வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்!
இலங்கையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் டுபாயில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பகுதியை சேர்ந்த இருவர் டுபாயில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிரிவெல்கெலேயைச் சேர்ந்த 28 வயதான சந்துன் மதுசங்க மற்றும் அண்டன்வில்வத்தையைச் சேர்ந்த ரமேஷ் உதார திலின என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையும் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வி அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
கல்வி அமைச்சின் (Education Ministry) உத்தியோகப்பூர்வ இணையத்தளம் அடையாளம் தெரியாத நபரொருவரால் ஊடுருவப்பட்டுள்ளதாக(Hack).தகவல் வெளியாகியுள்ளது. “Anonymous EEE”எனும் பெயர் கொண்ட நபர் இந்த ஊடுருவல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி இந்த ஊடுருவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த நபர் இணையத்தளத்தில் செய்தியொன்றை பதிவிட்டுள்ளார்
-
முல்லைத்தீவில் இளைஞர் கைது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அறுக்கப்பட்ட பெறுமதியான பலகையுடன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலனி பகுதியில் சட்டவிரோதமாக மரம் அறுக்கப்பட்டு பலகையாக்கப்படுவதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது. இதற்கமைய குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் முதிரை,பாலை மரங்கள் அறுக்கப்பட்ட நிலையில் தனியார் காணி ஒன்றில் காணப்பட்டுள்ள போது அதனை மீட்டுள்ளனர்.
-
இலங்கைக்கு நேரே 10 நாட்களுக்கு உச்சம் கொடுக்கப்போகும் சூரியன்!
ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 15 வரை இலங்கைக்கு மேலே சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை நாளைய தினம் (05) நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனம்…
-
ஈழத்தமிழர்களை இழிவாக பேசிய தமிழ் பெண்ணுக்கு நடுவீதியில் சம்பவம்!
ஈழத்தமிழர்களையும் அவர்களுடைய விடுதலை போராட்டத்தையும் இழிவாக பேசிய பெண் ஒருவர் நடுவீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புலம்பெயர்நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,பிரான்ஸில் வசிக்கும் சுஜி என்ற இலங்கை தமிழ் பெண் தனது டிக் டொக் பக்கத்தில் ஈழத்தமிழர்களின் தலைவர் பிரபாகரன் பற்றியும் அவர்களது விடுதலைப் போராட்டம் பற்றியும் இழிவாக அநாகரிகமான வார்த்தைகளால் பேசி காணொளி பதிவிட்டுள்ளார்.இந்தநிலையில், இவரது காணொளியால் கோபமடைந்த அங்கு வசிக்கும் ஈழத்தமிழ் மக்கள் குறித்த பெண்ணை வீதியில் வைத்து…
-
யாழில் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள்!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்தி சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவிலிருந்து மண்டைதீவு நோக்கி சட்ட விரோதமாக மாடுகள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றி வளைப்பின் போது மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடத்திச் செல்லப்பட்ட எட்டு மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் மீட்கப்பட்டுள்ளன. எனினும், சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்த்தர் யாழ் தலைமை…
-
ஜனாதிபதி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல் !
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்கள் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
-
ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி !
வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் நேற்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியர் தாக்கியதாக தெரிவித்துள்ளான். இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு…