Tag: #breakingnews
-
நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்!
குழந்தை பிறக்கும் போது பிரசவ அறைக்கு தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம் மருத்துவமனையில் செயல்படுத்தப்படவுள்ளதாக காசல் மகளிர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மகப்பேறு அறையில் ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.அத்துடன், பிரசவத்தின் போது கணவனுடன் தங்கிச் செல்லும் திட்டத்தின் மூலம் தாயால் குழந்தையை நல்ல மனநிலையில் பிரசவிக்க முடியும் என தெரியவந்துள்ளது.
-
கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற விரும்புவோருக்கான முக்கிய அறிவிப்பு!
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பானது 2024 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கட்டண உயர்வானது கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின் படி அறிமுகப்படுத்தப்படுவதாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
-
பாடசாலையில் உயிரிழந்த மாணவன் விவகாரம் அதிபருக்கு கிடைத்த தண்டணை!
மஸ்கெலியா பாடசாலையொன்றில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு நேற்றையதினம் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்ட போது நீதவான் நால்வரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, ஹட்டன் வலய கல்வி பணிமனை அதிகாரிகள் நேற்றையதினம்(05) குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்தனர். இதன்போது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஆகியோரும் ஒன்றுகூடினர். அதேவேளை மாணவன் இறப்புக்கு…
-
புத்தாண்டுகால விடுமுறை : அரசு ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறையுடன் தொடர்புடைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி சபையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
-
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட அமைச்சர்!
பொன்னாவெளி சுண்ணக்கல் போராட்டம் 270ஆவது நாளாக தொடர்கின்ற நிலையில் போராட்ட குழுவுடனும் மக்களுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடாமல் சுண்ணக்கல் அகழ்வுக்கு அனுமதியை கொடுத்ததோடு வன்முறையையும் கையாண்டமை கண்டிக்கத்தக்கது என அனைத்து மக்கள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அமைச்சரால் நேற்று (05) பொது மக்களுக்கு நிகழ்ந்த வன்முறை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், “சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தை நாம் நிகழ்த்தும் போது அமைச்சர் டக்ளஸ் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலிருந்து…
-
தமிழர்களின் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கும் இராணுவம்!
இராணுவமும், தொல்லியல் திணைக்களமும் தமிழர்கள் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தினை அவர் இன்று (06.04.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நில மீட்புக்கான போராட்டம் 200 நாட்களை கடந்தும் தொடர்கின்றது. அரசிடமிருந்து எத்தகைய உதவிகளையும் எதிர்பாராது தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்பிட சுய…
-
சட்ட விரோதமாக மருந்து பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!
கல்முனையில் கடற்படை மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனைக்காக மருந்துகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.63 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து 5,033 மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மருதமுனையை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை உணவு மற்றும் மருந்துப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக…
-
டக்ளஸ் தேவானந்தாவை துரத்திய மக்கள்!
கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்போது டக்ளஸிற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் உருவாகியுள்ளதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பொன்னாவெளி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீமெந்து தொழிற்சாலைக்கான வேலைத்திட்டங்களை இன்று (05) ஆரம்பித்து வைப்பதற்காக அவர் சென்றிருந்த போதே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு!
சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி இந்த செயல்முறை நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். ஆனால் சுற்றுலாத்துறையில் 6 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்களை பயன்படுத்துவதில்லை. இப்போது எங்களின் வாகனங்கள் பழையதாகிவிட்டன.அதனால் தான் சுற்றுலாத் துறைக்காக 250 பேருந்துகள் மற்றும் 750 வான்களை கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்துள்ளது என கூறியுள்ளார்.…
-
மீண்டும் ரணிலுடன் கைகோர்க்கும் சஜித்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டவை ஏற்கெனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும்் .தே.கவுடன் இணையலாமென, ஐ.தே.கவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவால்…