Tag: #breakingnews
-
யாழில் இடம்பெற்ற கோர விபத்து – அரச அதிகாரி பரிதாப உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் அரச அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவமானது நேற்று (11.4.2024) யாழ். கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான, 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். பாடசாலை விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை, கோப்பாய் – கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் வேக…
-
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டத்தில் குழப்பம்!
வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் குழப்பம் காரணமாக இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மட்ட தெரிவுகளுக்கான பொதுக்கூட்டம் இன்று (12.04.2024) காலை ஒலுமடு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கூட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக சிவசேனை அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையிலான குழு வருகை தந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்து குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவசேனை முன்னிலையில் நிர்வாகத் தெரிவு…
-
மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வருகைதர சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
-
மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
யாழ். மாவட்டத்தின் (Jaffna District) பல்வேறு பகுதிகளிலும் மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதிக மரக்கறி வகைகள் சந்தைக்கு வந்து சேர்வதால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், மீண்டும் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்து வருகின்றது.
-
பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடுவதை கண்டறிய சோதனை நடவடிக்கை!
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடுவதை கண்டறிவதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பயணிகளிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மூன்று தமிழர்கள்!
வெளிநாட்டிலிருந்து வந்த மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களே குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சில பொருட்களுக்கு சுங்கவரி செலுத்தாமல் கொண்டு வந்தமை அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது.
-
யாழ். நகரப் பாடசாலையில் மாணவர்களுக்கு காசநோய்!
யாழ்ப்பாணம் (Jaffna) நகரத்திலுள்ள ஆண்கள் பாடசாலை மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்வி பயிலும் மாணவனுக்கு உடல் மெலிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த மாணவனுக்குக் காசநோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய மாணவர்கள் சிலரைப் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில், அவர்களுக்கும் காசநோய் இருப்பது தெரியவந்துள்ளது.
-
கொழும்பில் 6 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
கொழும்பில் 1 கிலோ 105 கிராம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 06 கோடி ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் அவர் டுபாயில் (Dubai) தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெசல்வத்த தினுகவின் சகா எனவும் தெரியவந்துள்ளது.
-
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கை இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ். சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீர்கொழும்பு நீதவான்…
-
யாழில் சேகம்: காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் (8) இரவு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் சிறீரங்கநாதன் மதுமிதா எனும் 16 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.கடந்த 7ஆம் திகதி மாணவிக்கு இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் காலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படட நிலையில் அன்றிரவே உயிரிழந்துள்ளார். யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார்…