Tag: #breakingnews

  • கடலில் குழந்தை பிரசவித்த பெண்!

    கடலில் குழந்தை பிரசவித்த பெண்!

    யாழ்ப்பாணம் (Jaffna) – நயினாதீவை (Nainativu) சேர்ந்த பெண்ணொருவர் கடலில் பயணித்தவாறு குழந்தை பிரசவித்துள்ளார். இந்த சம்பவமானது, நேற்றைய தினம் (17.04.2024) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   இதனை தொடர்ந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததன் காரணமாக பொதுமக்கள் பெண்ணை போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி…

  • அமைச்சர் பாலித தெவரபெருமவின் மரணம்!

    அமைச்சர் பாலித தெவரபெருமவின் மரணம்!

    மின்சாரத் தாக்குதலின் காரணமாக உடற்பாகங்கள் அனைத்தும் முற்றாக செயலிழந்ததன் காரணமாகவே முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பிரதி அமைச்சர் பாலித தெவரபெருமவின்(Palitha Thewarapperuma) பிரேத பரிசோதனை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.அத்துடன், அவரது உடல் குடும்ப மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவருடைய குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

  • இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை!

    இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை!

    புதிய வீசா முறைமைய இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய புதிய வீசா முறைமை, பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும் அது தொடர்பான கட்டணங்கள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை 27.11.2023 அன்று விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

  • வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வழிப்பறி!

    வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வழிப்பறி!

    வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் முகமூடியணிந்த மூவரால் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதன்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்து கொண்டு கொள்ளையர்கள் தப்பிச்  சென்றுள்ளனர். குறித்த சம்பவமானது, இன்று (17.04.2024) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சிறு குழந்தை ஒன்றின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி இவ்வாறு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.  

  • இலங்கையில் இளம் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்!

    இலங்கையில் இளம் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்!

    மாத்தளையில் கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டு பெண் ஒருவர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.கந்தேநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுனுகல பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், பெண்ணின் சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தேநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • யாழ்.காவல்துறை உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

    யாழ்.காவல்துறை உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

    யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது , பெண்ணின் பூர்வீக…

  • வவுனியாவில் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி

    வவுனியாவில் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி

    அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவை வந்தடைந்த நிலையில், அவருடைய திருவுருவப்படத்துக்கு மக்கள் அஞ்சலி வெலுத்தியுள்ளனர். நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16.04) வவுனியாவை வந்தடைந்துள்ளது. மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வடக்கு – கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளது.

  • பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

    பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

    முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளைய தினம் (17.4.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.

  • முக்கிய அரச நிறுவனங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி

    முக்கிய அரச நிறுவனங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி

    நாட்டின் முக்கியமான அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் கல்விச் செயலளார் புபுது ஜாகொட இந்த குற்றச்சாட்டைச் முன்வைத்துள்ளார். புத்தாண்டில் அரசாங்கம் முதல் பணியாக அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

  • தமிழரசு கட்சியில் மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை!

    தமிழரசு கட்சியில் மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை!

    ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சிக்கு இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின்  தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத்துத் தெரிவிக்கையில், தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி…