Tag: A man was arrested with a domestic gun!
-
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
நாஉல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வராகொல்ல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாஉல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று 30 பிற்பகல் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 54 வயதுடைய கோன்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.