Tag: 18-year-old killed in road accident in Oshawa
-
ஒஷாவாவில் இடம் பெற்ற வீதி விபத்தில் 18 வயது இளைஞன் உயிரிழப்பு
கனடாவின் ஒஷோவா பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 18 வயது இளைஞன் கொல்லப்பட்டுள்ளார். ஒரு வாகனம் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கிரான்ட்விவ் மற்றும் ரெட்பர்ன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் தர்ஹம் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த வாகனம் மின்கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து வேறும் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.…