Tag: 12 injured in Toronto fire
-
ரொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்தினால் 12 பேர் காயம்
ரொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்தில் மேலும் பலர் இடம்பெயர நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ டவுன்ரவுன் பகுதியில் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டடமொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த கட்டடத்தின் ஆறாம் மாடியில் தீ விபத்து பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.