Category: விளையாட்டு செய்திகள்
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் தலைவராக சுப்மன் கில்
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா விளையாட மாட்டார் எனவும் இந்த சூழ்நிலையில், துணைத் தலைவரான கில் அணியை வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித்தின் காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கில் சிறிது காலம் அணியை வழிநடத்தினார். பின்னர்…
-
ஐபிஎல் தொடரில் இலகுவான வில்லோ மட்டைகளை பயன்படுத்த தோனி முடிவு
பிரம்மாண்டமான சிக்ஸர்களை அடிக்க எடைக் கூடிய மட்டைகளைப் பயன்படுத்துவதில் பெயர் பெற்ற எம்.எஸ். தோனி, வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் இலகுவான வில்லோ மட்டைகளைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஒரு அறிக்கையின்படி, மீரட்டைச் சேர்ந்த கிரிக்கெட் உபகரண நிறுவனம் இந்த பருவத்தில் 10-20 கிராம் எடை குறைவான மட்டைகளை தோனிக்கு வழங்கியுள்ளது. “ஒவ்வொரு மட்டையின் எடையும் சுமார் 1230 கிராமுடன் முன்பு இருந்த அதே வடிவத்தைக் கொண்டுள்ளது” என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக தோனி 1250…
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேறின
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் இருந்து பாகிஸ்தான் அணியும் வங்கதேச அணியும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நேற்று பங்களாதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பின்னர் இந்த இரு அணிகளும் முதல் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. நேற்றையப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்களை குவித்திருந்தனர். பதிலுக்கு களம் இறங்கிய நியூசிலாந்து…
-
பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனத்துக்கு தடை
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனத்தின் (PFF) அங்கத்துவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பாகிஸ்தான் மீது (FIFA) தடை விதிப்பது இது மூன்றாவது முறையாகும். சர்வதேச கால்பந்து அளவுகோல்களின்படி பாகிஸ்தானின் கால்பந்து அரசியலமைப்பை திருத்தத் தவறியதே இந்தத் தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில் முக்கிய காரணியாக உள்ளது. ஜூன் 2019 முதல், பாகிஸ்தான் கால்பந்து FIFA ஆல் நியமிக்கப்பட்ட ஒரு குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனம் அவர்களின் பரிந்துரைகளின்படி…
-
சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது – இன்று வழங்கப்படுகிறது
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ சார்பில் இன்று மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994ம் ஆண்டு இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கவுரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த விருதினைப் பெறும் 31-வது நபர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 51 வயதான டெண்டுல்கர், இந்திய அணிக்காக 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக…