Category: முக்கிய செய்தி
-
யாழில் இருந்து சென்ற கார் திருகோணமலையில் விபத்து – சிறுமி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் திருகோணமலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார். காரில், சிறுவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறையை சேர்ந்த கணவன் – மனைவி மற்றும் அவர்களது இரு பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை , திருகோணமலை ஈச்சிலம்பற்று பகுதியில் கார் வேக கட்டுப்பாட்டை இழந்து , வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. விபத்தில் கணவன் – மனைவி…
-
யாழில்.வாள் வெட்டில் இளைஞன் படுகாயம்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தொடர்பு பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , வாள் வெட்டு சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் தொடர்பு பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-
கனடாவில் கடலெனத் திரண்ட பெருந்திரளான மக்கள்!
கடலெனத் திரண்ட பெருந்திரளான மக்கள் திரட்சியோடும், நேர்த்தியான ஒழுங்கமைப்போடும், மாபெரும் எழுச்சி நிகழ்வாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கனடாவிலும் அல்பர்ட் கம்பல் சதுக்கத்தில் மே 18, 2024 சனிக்கிழமை மாலை பல்லின மக்களையும் ஈர்க்கும் வண்ணம் வரலாற்றில் பதிவாகியுள்ளது! இவ்வாண்டு தாயக மக்களின் அடக்குமுறைகளைத் தகர்த்துடைத்த பேரெழுச்சியும், உலகெங்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் மாபெரும் எழுச்சியும், தமிழக மக்களின் உணர்வெழுச்சியும் எம் தமிழினத்தின் ஓயாத ஒன்றுப்பட்ட நீதி வேண்டிப் போராடும் வலிமையான செய்தியை உலகிற்கு ஓங்கி…
-
அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வோம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி ஸ்கார்புரோவில் பரிமாறப்படும் இடங்களின் விவரங்கள்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி முள்ளிவாய்கால் கஞ்சி ஸ்காபுரோவில் நியூஸ் ஸ்பைசி லாண்ட், இரா சுப்ப மாக்கற், நியூ ஓசன்,ரூச் பேக்கறி மற்றும்பிறம்ரணில் தினுசா கேற்றறிங், மாயா கேற்றறிங், மற்றும் மாக்கம் சவுத்தேசியன் ஆகிய இடங்களில் மே18 வரை இடம் பெறுகின்றன. அனைவரும் கலந்து நினைவு வணக்கம் மற்றும் கஞ்சியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுமாறு வேண்டுகின்றோம்.
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றத்தில் கைதான நால்வருக்கும் பிணை!
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உள்ளிட்ட மூன்று பெண்களும் ஒரு ஆணுமாக நான்கு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமையை அடுத்து மன்றின் உத்தரவுக்கமைய 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.…
-
விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் தடை நீடிப்பு நேர்மையற்றது: இயக்குனர் கௌதமன் குற்றச்சாட்டு
விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு மூலம் சீன அரசுக்கு இந்திய அரசு உதவி செய்துள்ளதாக இயக்குநர் கௌதமன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விடுதலைப்புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடை நீடிப்பு நேர்மையற்ற மற்றும் அறமற்ற ஒரு செயல் என இயக்குநர் கௌதமன் கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப்புலிகள் வன்முறை இயக்கம் அல்ல என ஜரோப்பிய யூனியன் சுட்டிக்காட்டி, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள நிலையில், இந்திய அரசாங்கம் மேலும் 5 வருடங்களுக்கு தடையை நீடித்துள்ளதன் மூலம்…
-
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வருகிறது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையிலும் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் யாழ்ப்பாண விஜயத்தின் போது வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோபூர்வமாக மக்களிடம்…
-
நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்!
Jacob Arulrajah Yogendran Vaiseegamagapathy Mariajerom Mariyanayagam Jeyathasan Kurukularajah Reginald Nagarajah Shweta Uthayakumar Kalaichelvi Sivasubramaniam Joseph PAntony Cynthia Sri Pragash Shanthini Sivaraman Sudesh Suren Mahendran Wasanthaa Rohini Devi Karuppiah Gopalakrishnan Arumugam Navaneshan Murugandy Sivani Ramesh Vijitharan Varatharajah Kumuthini Kunaratnam Thaninayagam Shanmuganathan Jeyameera Karthick Ravichandran Mathy Mahalingam NONE Kandasamy Sooriyakumaran Gupenthiran Mahalingam
-
யாழில் போதைப்பொருள் உற்பத்தி மையம் சுற்றி வளைப்பு!
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் உற்பத்தி மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு போதைப்பொருள் உற்பத்தி பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பிரித்தெடுக்கும் உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த வீட்டினை சுற்றி வளைத்துள்ளனர். அதன் போது வீட்டில் இருந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர். அதனை அடுத்து வீட்டினுள் சென்று பொலிஸார் சோதனை…
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் விளக்கமறியலில்!
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதான பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சம்பூர் பொலிசாரினால், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட நால்வரும் இன்றைய தினம் திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22),…