Category: முக்கிய செய்தி

  • யாழ்.நூலகம் முன்பாக மெழுகுவர்த்திகள ஏந்தி நினைவேந்தல்!

    யாழ்.நூலகம் முன்பாக மெழுகுவர்த்திகள ஏந்தி நினைவேந்தல்!

    யாழ் நூலக எரிப்பின் 43 ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு , இன்றைய தினம் சனிக்கிழமை மாலை நூலகம் முன்பாக மெழுகுவர்த்திகள ஏந்தி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

  • படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல்!

    படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல்!

    படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது   யாழ்ப்பாணம் பிரதான வீதி, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பொது நினைவுத்தூபியில் இவ் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுருவபடத்திற்கு, உதயன் குழும தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவனால்…

  • யாழில். நூலக எரிப்பு தொடர்பான ஆவணப்படம் திரையிடல் – அரசியல் பேச தடை விதித்த மாநகர சபை!

    யாழில். நூலக எரிப்பு தொடர்பான ஆவணப்படம் திரையிடல் – அரசியல் பேச தடை விதித்த மாநகர சபை!

    யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணப்படத்தினை பொது நூலக கேட்போர் கூடத்தில் திரையிட அனுமதி வழங்கும் போது, அரசியல் பேச கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   குறித்த ஆவண படத்தினை கடந்த 17 வருட காலமாக நூலக கேட்போர் கூடத்தில் திரையிடுவதற்கான முயற்சிகளை பல தரப்பினரும் முன்னெடுத்து வந்த நிலையி அது சாத்தியமாகவில்லை. இந்நிலையில், யாழ்.சிவில் சமூக நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியில் , ஆவணப்படத்தினை திரையிட அனுமதி வழங்கிய மாநகர சபையினர்…

  • ஜூன் மாத நடுப்பகுதியில் யாழுக்கு குடிநீர்!

    ஜூன் மாத நடுப்பகுதியில் யாழுக்கு குடிநீர்!

    யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்தின் ஆரம்ப பணிகள் ஜூன் மாத நடுப்பகுதியில் முற்றுப்பெறும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை பிரதானமாக காணப்படுகிறது அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜூன் மாத நடுப்பகுதியில் குடிநீர் விநியோகத்திற்கான ஆரம்ப பணிகள் முற்று பெறும் என நம்புகிறேன் என தெரிவித்தார் .

  • யாழ்.மாவட்ட பதிவாளர் நாயக திணைக்கள ஒரு நாள் சேவைகள் நிறுத்தம்!

    யாழ்.மாவட்ட பதிவாளர் நாயக திணைக்கள ஒரு நாள் சேவைகள் நிறுத்தம்!

    யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் நாயக திணைக்களத்தில் பிரதியாக்க இயந்திரங்கள் (போட்டோ கொப்பி) பழுதடைந்துள்ளமையால் சேவை பெற செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.   இயந்திரங்கள் பழுந்தடைந்துள்ள காரணத்தால், திணைக்களத்தில் காணிகளுக்கான தோம்பு மற்றும் உறுதி பிரதிகளை வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. விற்பனைக்கு பிந்திய சேவையில் திருப்தியின்மை.  இயந்திரங்களை விற்பனை செய்த நிறுவனங்களே விற்பனைக்கு பிந்திய சேவைகளை வழங்குவதானல். அவர்களே பழுதுகளை சரி செய்ய ஊழியர்களை அனுப்பி வைப்பார்கள். இயந்திரங்கள் பழுந்தடைந்தமை தொடர்பில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்…

  • வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது!

    வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது!

    யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலம் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது  வடமாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படகூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் திகதி வரை விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல வேண்டாம். எதிர்வரும்…

  • துரோகி என சொல்வார்கள் என்பதற்காக உண்மையை கூற அஞ்ச மாட்டேன்!

    துரோகி என சொல்வார்கள் என்பதற்காக உண்மையை கூற அஞ்ச மாட்டேன்!

    யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.  யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் “கடந்த 2005 ஆம் ஆண்டு ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில் கூறியது தொடர்பில்,  ஊடகவியலாளர்…

  • விழிப்புலனற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குங்கள்!

    விழிப்புலனற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குங்கள்!

    விழிப்புலனற்ற வேலையில்லாத பட்டதாரிகளுக்கு விசேட செயற்திட்டம் ஊடாக விரைவாக அரச வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என விழிப்புலனற்ற பட்டதாரியான விஜயகுமார் விஜயலாதன் கோரிக்கை விடுத்துள்ளார்   யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு கோரியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நான் எனது பட்டப்படிப்பை முடித்து சுமார் நான்கு ஆண்டு கால பகுதிக்கு மேலாக வேலை வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. படிக்கும் காலத்தில் நாம் மற்றுமொருவரின் உதவியுடன் பல தடைகளை தாண்டிய கற்று, பட்டதாரி…

  • யாழில். தமிழ் பொலிசாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓத வைத்த பொலிஸ் உயர்மட்டம்!

    யாழில். தமிழ் பொலிசாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓத வைத்த பொலிஸ் உயர்மட்டம்!

    யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில்  நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.   காங்கேசன்துறை குமார கோவில் வளாகத்தில் கெமுனு விகாரை அமைக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் குமார கோவில் இருந்தவேளை, ஆலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் கெமுனு விகாரை எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது நிர்மாணிக்கப்பட்டது. தற்போது குறித்த பகுதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் மீள்குடியேறி குமார கோவிலில் பூஜை…

  • யாழ். மருத்துவ பீடத்திற்கான புதிய கட்டட தொகுதியை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

    யாழ். மருத்துவ பீடத்திற்கான புதிய கட்டட தொகுதியை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.   இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு சத்திர சிகிச்சை கூடங்களும், ஒரு சத்திர சிகிச்சை கூடமும், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம், மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.…