Category: முக்கிய செய்தி
-
விடுதலைப்புலிகள் அமைப்பு குறித்து எழுந்துள்ள பயம்!
காலி முகத்திடல் அரகலய பூமியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கம் வெளிப்பட்டது. ஆகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,”முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். விடுதலை புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய…
-
மாவை மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள் !
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரணம் இயற்கையானது அல்ல மாறாக அது ஒரு கொலைக்கு ஒப்பான செயல் என வைத்திய நிபுணர்கள் மாவையின் குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர். மேலும் வரம்பு மீறிய அதிர்ச்சி, அல்லது தாங்க முடியாத ஏக்கங்கள் நிகழும் போது தலைப் பகுதியில் உள்ள முக்கிய நரம்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து எல்லை மீறிய இரத்த ஓட்டத்தின் போது நரம்பு பகுதி தன் நிலையை இழக்கும் போது இவ்வாறான மரணங்கள் நிகழ்கிறது…
-
சீமானை இரகசியமாகக் கண்காணித்த பொட்டம்மான்!
சீமானின் வன்னிப் பயணம் என்பது நீண்ட நாட்களாகவே வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகிவந்த ஒன்றாக இருந்துவந்த அதேவேளை, வன்னியில் சீமானின் செற்பாடுகள் என்பதும் பல மர்மங்கள் நிறைந்தவையாகவே இருந்துவந்தன. எதற்காகச் சீமான் வன்னிக்கு அழைக்கப்பட்டார் என்கின்ற கேள்விக்கு, எல்லாளன் திரைப்படத்தை இயக்குவதற்காக என்று முன்னர் கூறப்பட்டது.ஆனால் பல மாதங்கள் நடைபெற்ற எல்லாளன் திரைப்பட உருவாக்கத்தில் அந்தத் திரைப்படத்தை ஆரம்பித்துவைத்த ஒரு நாளைத் தவிர, சீமான் அந்த திரைப்படப் பணிகளில் பெரிதாக ஈடுபடவில்லை என்று அறியமுடிகின்றது. அப்படியானால் எதற்காக அவர் விடுதலைப்…
-
அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுவிப்பு
இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது இலங்கை செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 20 ஆம் திகதி…
-
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எம்.பி கைது!
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மாலை 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி இரவு அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ்…
-
100வது ரொக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) இன்று தனது 100வது ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி-எப்15 (GSLV-F15) ரொக்கெட்டின் மூலம் என்.வி.எஸ்-02 (NVS-02) என்ற உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் புவியிலிருந்து விண்ணில் அனுப்பப்பட்டது. இந்த செயற்கைக்கோள் இன்று 29 ம் திகதி காலை 6.23 மணிக்கு ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது தரை, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கவும், பேரிடர்களை துல்லியமாக கணிக்கவும்…
-
ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல்! அவசரமாக நடாத்த முதல்வர் திட்டம்!
கனடாவின் பிரதான மாகாணங்களில் ஒன்றான ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரத்தில் தேர்தல் தொடர்பில் முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறு எனினும் மகாண அரசாங்கம்…
-
யாழில். ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் – வாகனங்களுக்கும் தீ வைப்பு!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் அடங்கிய வன்முறை கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, தாக்குதலை…
-
மந்திகை வைத்தியசாலையில் வைத்தியர் உயிர்மாயப்பு!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.குறித்த சம்பவம் இன்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலையில் நடந்தது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
-
புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ள வேண்டும்!
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc – Andre Franche ) உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், வட மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர் (காணி ), மாகாண காணி ஆணையாளர் மற்றும் யாழ்…