Category: முக்கிய செய்தி

  • கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வீடற்றவர்களின் மரணங்கள் அதிகரிப்பு

    கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வீடற்றவர்களின் மரணங்கள் அதிகரிப்பு

    கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வீடற்றவர்களின் மரணங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வீடற்றவர்களின் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது. வாரம் ஒன்றிற்கு சுமார் ஐந்து மரணங்கள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ரெறான்ரோ பொதுசுகாதார அலுவலகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 135 வீடற்றவர்கள் உயிரிழந்திருந்தனர். 2023 ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியின் மரண…

  • புதிய வரி திருத்திற்கு அமைய 6 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும் வாகனங்கள்

    புதிய வரி திருத்திற்கு அமைய 6 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும் வாகனங்கள்

    புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலோன் மோட்டர் டிரேடர்ஸ் ஒழுங்கமைப்பின் தலைவர் என்ரூ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி 3 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உந்துருளி ஒன்று இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதுடன் விதிக்கப்பட்ட வரி காரணமாக 7 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கும் என குறிப்பிட்டார். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஆறரை இலட்சம் ரூபாவால் அதிகரிக்கக் கூடும்.…

  • கனடாவில் அதிக அளவில் களவாடப்படும் தொலைபேசிகள்

    கனடாவில் அதிக அளவில் களவாடப்படும் தொலைபேசிகள்

    கனடாவில் அதிக எண்ணிக்கையிலான தொலைபேசிகள் களவாடப்படுவதாக அல்லது காணாமல் போவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ரொறன்ரோவில் அமைந்துள்ள முன்னணி தொலைபேசிகள் விற்பனை நிலையங்களில் இவ்வாறு தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரையில் ஹால்டன் பிராந்தியத்தில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பில் ஹால்டன் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காணாமல் போன தொலைபேசிகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சி சி டிவி…

  • சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்

    இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4ஆம் திகதி உறவினர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த தினத்தில் கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை ஒவ்வொரு கைதிக்கும் போதுமான அளவில் வழங்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து அனைத்து சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கைதிகளை பார்வையாளர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

  • சுதந்திர தின விழாவின் பாதுகாப்புக்காக 1,650 பொலிஸ் அதிகாரிகள்!

    சுதந்திர தின விழாவின் பாதுகாப்புக்காக 1,650 பொலிஸ் அதிகாரிகள்!

    77ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான பிரதான விழா மற்றும் ஒத்திகைகளின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1,650 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படாத வகையில் ஒத்திகை மற்றும் நிகழ்வை எளிதாக்கும் வகையில் பொலிஸ் சிறப்பு போக்குவரத்து திட்டத்தையும் அறிவித்துள்ளது.சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகைக்கான தயாரிப்பாக, இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்திற்கு அருகில்…

  • யாழ் முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண் கலங்கியவர் மாவை!

    யாழ் முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண் கலங்கியவர் மாவை!

    இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என்ற அடிப்படையில் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்த மூத்த அரசியல்வாதியும் தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, யாழ் மாவட்ட…

  • ஜனாதிபதி அநுரவின் கேள்வியால் தடுமாறிய உயர் அதிகாரிகள்

    ஜனாதிபதி அநுரவின் கேள்வியால் தடுமாறிய உயர் அதிகாரிகள்

    வடக்கு மாகாண அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அதிகாரிகளைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (31) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை விடயதானங்கள் தொடர்பில் நிதி வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்த நிலையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு கேள்வியை முன்வைத்திருந்தார். “மத்திய அரசால் வடக்கு மாகாண…

  • விடுதலைப்புலிகள் அமைப்பு குறித்து எழுந்துள்ள பயம்!

    காலி முகத்திடல் அரகலய பூமியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கம் வெளிப்பட்டது. ஆகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,”முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். விடுதலை புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய…

  • மாவை மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள் !

    மாவை மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள் !

    இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரணம் இயற்கையானது அல்ல மாறாக அது ஒரு கொலைக்கு ஒப்பான செயல் என வைத்திய நிபுணர்கள் மாவையின் குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர். மேலும் வரம்பு மீறிய அதிர்ச்சி, அல்லது தாங்க முடியாத ஏக்கங்கள் நிகழும் போது தலைப் பகுதியில் உள்ள முக்கிய நரம்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து எல்லை மீறிய இரத்த ஓட்டத்தின் போது நரம்பு பகுதி தன் நிலையை இழக்கும் போது இவ்வாறான மரணங்கள் நிகழ்கிறது…

  • சீமானை இரகசியமாகக் கண்காணித்த பொட்டம்மான்!

    சீமானின் வன்னிப் பயணம் என்பது நீண்ட நாட்களாகவே வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகிவந்த ஒன்றாக இருந்துவந்த அதேவேளை, வன்னியில் சீமானின் செற்பாடுகள் என்பதும் பல மர்மங்கள் நிறைந்தவையாகவே இருந்துவந்தன. எதற்காகச் சீமான் வன்னிக்கு அழைக்கப்பட்டார் என்கின்ற கேள்விக்கு, எல்லாளன் திரைப்படத்தை இயக்குவதற்காக என்று முன்னர் கூறப்பட்டது.ஆனால் பல மாதங்கள் நடைபெற்ற எல்லாளன் திரைப்பட உருவாக்கத்தில் அந்தத் திரைப்படத்தை ஆரம்பித்துவைத்த ஒரு நாளைத் தவிர, சீமான் அந்த திரைப்படப் பணிகளில் பெரிதாக ஈடுபடவில்லை என்று அறியமுடிகின்றது. அப்படியானால் எதற்காக அவர் விடுதலைப்…