Category: முக்கிய செய்தி

  • தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்-ஸ்ரீதரன்

    தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்-ஸ்ரீதரன்

    மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். சமகால அரசியல் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில்  08 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது இனவாதக் கருத்தல்ல என சுட்டிக்காட்டியுள்ள அவர், சட்டம் சமனானது எனக் கூறும் இன்றைய அரசு தனது நிலைப்பட்டில் இருந்து படிப்படியாக மாறி தனது சுய நிலைக்கு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.…

  • யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்!

    யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்!

    யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (08) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகமும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று கூறினார். அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல்…

  • அனுர அரசுக்கு எதிரான கண்டனம்!

    அனுர அரசுக்கு எதிரான கண்டனம்!

    நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை ஆளும் தரப்பே இல்லாதொழித்துள்ளது என்றும், நாட்டின் மூன்றாம் பிரஜையான சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியள்ளார்.மேலும், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மூடப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், எளிமையாக செயற்படுகிறோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை அரசாங்கம் தோற்றுவிக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய…

  • இலங்கை அரச பேருந்து சாரதி மீது வாள்வெட்டு

    இலங்கை அரச பேருந்து சாரதி மீது வாள்வெட்டு

    முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பேருத்தில் பயணிகள் நடுவீதியில் நிர்க்கதிக்குள்ளாகினர். யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற அரச பேருந்தின் சாரதி மீது விசுவமடுப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் சிலர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வால் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக…

  • ரவியின் முன்மொழிவுக்கு அரசாங்கம் உடன்படுவதாக பிரதமர்  ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

    ரவியின் முன்மொழிவுக்கு அரசாங்கம் உடன்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

    பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்வதற்கு அனைத்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை ரத்துச் செய்வது தொடர்பான தனிநபர் முன்மொழிவை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று 07 பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை தெரிவித்தார். பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: “நாங்கள் 2001 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற சலுகைகளைக் குறைப்பது மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது…

  • சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற நபருக்கு விமானநிலையத்தில் நடந்த சம்பவம்!

    சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற நபருக்கு விமானநிலையத்தில் நடந்த சம்பவம்!

    சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற நபருக்கு விமானநிலையத்தில் நடந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு சென்ற தமிழர் ஒருவரிடம் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் லஞ்சம் பெற்ற ஊழியர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில ஊழல் அதிகாரிகளின் மோசடி நடவடிக்கைகள் குறித்து சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குடிவரவு மற்றும் குடியகல்வுக்கான பதில் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் உத்தரவிற்கமைய, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு…

  • பிலிப்பைன்ஸில் பதவி நீக்கபட்ட துணை ஜனாதிபதி

    பிலிப்பைன்ஸில் பதவி நீக்கபட்ட துணை ஜனாதிபதி

    பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டத்தை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவுசெய்துள்ளது. பொது நிதியிலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை பயன்படுத்தியதாகவும் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் ‘பாங்பாங்’ மார்கோஸை படுகொலை செய்வதாக மிரட்டியதாகவும் டுடெர்ட்டே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது பிரதிநிதிகள் சபையின் 306 உறுப்பினர்களில் மொத்தம் 215 பேர் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டை பதவி நீக்கம் செய்ய வாக்களித்துள்ளனர். இது மசோதா நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான மூன்றில் ஒரு…

  • போதை மருந்து கடத்துவோருக்கு  கடுமையான  தண்டனை விதிக்கப்படும்

    போதை மருந்து கடத்துவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்

    போதை மருந்து கடத்துவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் தெரிவித்துள்ளார். 40 மில்லி கிராம் எடைக்கும் அதிகமான பென்டனைல் என்னும் போதை மருந்து வைத்திருப்போருக்கு ஆயுள் தண்டனை விதிக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொலைக் குற்றச் செயலுக்கு வழங்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். 20 முதல் 40 மில்லி கிராம் எடையுடைய போதைப் பொருள் கடத்துவோருக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.…

  • அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் வெளியான அதிர்ச்சித்தகவல்!

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் வெளியான அதிர்ச்சித்தகவல்!

    சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர்கள் நேற்று அமெரிக்காவின் ராணுவ விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். இந்நிலையில் , அவர்களில் சிலர் அமெரிக்கா செல்வதற்கு 60 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளதாக கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன ஏஜென்சிகளுக்கு  40 லட்சம் முதல் 60 லட்சம் கொடுத்து பயணம்   சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கிய வெளிநாட்டு நபர்களை கண்டறிந்து, அவர்களை நாடு கடத்த டிரம்ப் அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, நேற்று முதல் கட்டமாக…

  • ஒன்றாரியோவில் கொள்ளைச் சம்பவத்துடன்டன் தொடர்புடைய ஒருவர் கைது

    ஒன்றாரியோவில் கொள்ளைச் சம்பவத்துடன்டன் தொடர்புடைய ஒருவர் கைது

    கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் மோரிஸ்டோன் பகுதியில் வீடு உடைப்பு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 31 ஆம் தேதி இந்த கொள்ளை சம்பவம் இவ்விடம் பெற்றுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் வெலிங்டன் கவுன்ட்டி பகுதியில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று பேர் வீட்டுக்குள் பலவந்தமாக பிரவேசித்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது வீட்டு…