Category: முக்கிய செய்தி
-
ரணில் இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்.
ஓமானில் நடைபெற்ற 8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவை இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சந்தித்தார். முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க மாநாட்டில் விருந்தினர் பேச்சாளராக கலந்து கொள்கிறார். ஓமான் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து இந்தியா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள 8வது இந்தியப் பெருங்கடல் மாநாடு, பிப்ரவரி 16–17, 2025 அன்று மஸ்கட்டில் நடைபெறுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘கடல்சார் கூட்டாண்மையின் புதிய எல்லைகளை நோக்கிய பயணம்’ என்பதாகும்.
-
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கும் நிலைக்கு திரும்பியது.
செயலிழந்திருந்த நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் இயங்கும் நிலைக்குத் திரும்பியுள்ளன. அதன்படி, தற்போது இரண்டு மின் பிறப்பாக்கிகள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் மற்றைய மின் பிறப்பாக்கியைும் மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
-
டொரன்டோவில் கடும் பனிப்பொழிவு நிலை
கனடாவின் டொரன்டோவில் கடும் பனிப்பொழிவு நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிக மோசமான பனிப்பொழிவு தற்போது நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அநேக பகுதிகளில் குறிப்பாக டொரன்டோ பெரும்பாகத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் 25 சென்டிமீட்டருக்கு மேல் பனிப்பொழிவு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்திற்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் டொரன்டோவில் பதிவான…
-
கனடிய தேசிய கொடிகள் விற்பனையில் அதிகரிப்பு
கனடாவின் தேசியக்கொடி விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய நாட்களாக உலக அரங்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் காரணமாக இவ்வாறு கனடாவின் தேசியக்கொடிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்கரியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஒன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா மீது பிரயோகித்து வரும் அழுத்தங்கள் காரணமாக இந்த தேசப்பற்று உந்துதல் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், கனடாவை அமெரிக்க மாநிலமாக இணைத்துக்கொள்ள போவதாக எச்சரித்துள்ளார். மேலும் பல்வேறு வரி…
-
அமெரிக்காவை விட்டுவிட்டு வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் கனேடிய மக்கள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரிவிதிப்பு மிரட்டல்களை, கனேடிய அரசியல்வாதிகளை விட அதிக சீரியஸாக கனேடிய மக்கள் எடுத்துக்கொண்டுள்ளதுபோல் தெரிகிறது. கனடா மீது கூடுதலாக 25 சதவிகித வரிகள், கனேடிய கார்கள் மீது 100 சதவிகித வரிகள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிக்கொண்டே இருக்கிறார். பதிலடி நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக தெரிவித்தும், கனேடிய அரசு வரிகள் தொடர்பில் முழுமையான முடிவு எடுத்ததுபோல் தெரியவில்லை. ஆனால், மக்கள் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகிவிட்டார்கள். கனடா மீது அமெரிக்கா வரிகள்…
-
ட்ரம்ப், மோடி சந்திப்பு – அமெரிக்கா, இந்தியா உறவு வலுப்படுமா?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிலையில் நாளை புதன்கிழமை அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு இடம்பெறும் நிலையில் அதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பாரிஸ் சென்றார். பாரிஸில் இன்று நடைபெறும் 2 ஆவது நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் மோடி நாளை அமெரிக்காவுக்கு செல்கிறார். நாளை மறுதினம் வோஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ளார். கனடா, மெக்ஸிகோ,…
-
ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்!
கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பழைய விண்ணப்பங்களை விடுத்து புதிய விண்ணப்பங்களை அமுல்படுத்தும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது அவ் தீர்ப்பின்…
-
மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் CEO – ஜனாதிபதி சந்திப்பு..!
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (10) பிற்பகல் துபாயில் உள்ள ஜுமேரா பீச் ஹோட்டலில் மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ராஸ் அல் கைமா ஆட்சியாளரின் மருமகனுமான ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமியை சந்தித்தார். இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
-
கனடிய பிரதமர் பிரான்சுக்கு விஜயம்!
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரான்சிக்கு விஜயம் செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பிரான்சிற்கு விஜயம் செய்துள்ளார். சர்வதேச செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறுகின்றது. அமெரிக்க அரசாங்கம் கனடாவின் உலோக உற்பத்திகள் மீது 25 வீத வரி விதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இந்த விஜயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் தாக்கங்கள்…
-
இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை செய்யப்பட வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மின் வெட்டு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டவுள்ளது. நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.…