Category: முக்கிய செய்தி

  • செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை

    செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை

    கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் சட்டத்தரணி போல் வேடமிட்டு நீதிமன்றத்திற்கு துப்பாக்கியைக் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகநபரான குறித்த பெண் நாட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சிறப்ப தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்திற்கு பின்னர் அவர் காணாமல் போயுள்ளார், மேலும் சில தகவல்கள் அவள் வெளிநாட்டிற்கு தப்பிச்…

  • அரசாங்கம் வாகன வரிகளைக் குறைக்கத் திட்டம்

    அரசாங்கம் வாகன வரிகளைக் குறைக்கத் திட்டம்

    சந்தையின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. பெப்ரவரி முதலாம் திகதி, தனியார் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுமார் நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தற்காலிகத் தடையை அரசாங்கம் நீக்கியது. இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளினால் புதிய வாகனங்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உதாரணமாக, வேகன்-ஆர் போன்ற ஒரு சிறிய காரின் விலை சுமார் ஏழு மில்லியனிலிருந்து 10…

  • நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டின் பின் காதலனுடன் இந்தியா தப்பிக்க திட்டம்..!

    நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டின் பின் காதலனுடன் இந்தியா தப்பிக்க திட்டம்..!

    அண்மையில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொன்ற சூடு நடத்தியவரின் காதலி நேற்று (21) மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம, பமுனுவவில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் இந்தப் பெண், முக்கிய சந்தேக நபரான மஹரகம, தம்பஹேன வீதியில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதியான சமிந்து தில்ஷான் பியுமாங்க கண்டனாராச்சியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக…

  • வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு.

    வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு.

    வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என தான் மனதார பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் மக்கள் நல நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு நாங்களும் ஆதரவளிப்போம் எனவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், “வளமான நாடு, அழகான வாழ்வு என்ற கொள்கையை, மக்கள் ஆணையைப் பெறுவதற்காக நீங்கள் முன்வைத்தீர்கள். குறித்த கொள்கை தொகுப்பில்…

  • நாடாளுமன்ற பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைத்தரும் வாகனங்கள், நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நாடாளுமன்றம் கூடும் தினங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், நேற்று (19) புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (20) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகைத் தரவுள்ளார்.

  • அரச ஊழியர் சம்பள உயர்வு குறித்து வெளியான தகவல்

    அரச ஊழியர் சம்பள உயர்வு குறித்து வெளியான தகவல்

    2025 வரவு செலவுத் திட்டத்தில் திட்டமிடப்பட்ட அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க விளக்கம் (Mahinda Jayasinghe) அளித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். அதன்போது, அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சிலர் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகக கூறியுள்ளார். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட சம்பள அதிகரிப்புடன், அரச சேவையின் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ள PL…

  • அதிகரிக்கும் ஊதியம்  இலங்கை 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

    அதிகரிக்கும் ஊதியம் இலங்கை 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

    இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளும்ன்றில் உரையாற்றி வருகின்றார். அந்தவகையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தெரிவிக்கையில், அரச சேவையில் முதல் அடிப்படை சம்பள திருத்தம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் ஆகிவிட்டதால், அனைத்து காரணிகளையும் ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டு சம்பள கட்டமைப்பை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்குவது அவசியம், மேலும் பட்ஜெட்டில் அதிக சுமையை…

  • ரணில் இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்.

    ரணில் இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்.

    ஓமானில் நடைபெற்ற 8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவை இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சந்தித்தார். முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க மாநாட்டில் விருந்தினர் பேச்சாளராக கலந்து கொள்கிறார். ஓமான் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து இந்தியா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள 8வது இந்தியப் பெருங்கடல் மாநாடு, பிப்ரவரி 16–17, 2025 அன்று மஸ்கட்டில் நடைபெறுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘கடல்சார் கூட்டாண்மையின் புதிய எல்லைகளை நோக்கிய பயணம்’ என்பதாகும்.

  • நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கும் நிலைக்கு திரும்பியது.

    நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கும் நிலைக்கு திரும்பியது.

    செயலிழந்திருந்த நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் இயங்கும் நிலைக்குத் திரும்பியுள்ளன. அதன்படி, தற்போது இரண்டு மின் பிறப்பாக்கிகள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் மற்றைய மின் பிறப்பாக்கியைும் மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

  • டொரன்டோவில் கடும் பனிப்பொழிவு நிலை

    டொரன்டோவில் கடும் பனிப்பொழிவு நிலை

    கனடாவின் டொரன்டோவில் கடும் பனிப்பொழிவு நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிக மோசமான பனிப்பொழிவு தற்போது நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அநேக பகுதிகளில் குறிப்பாக டொரன்டோ பெரும்பாகத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் 25 சென்டிமீட்டருக்கு மேல் பனிப்பொழிவு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்திற்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் டொரன்டோவில் பதிவான…