Category: முக்கிய செய்தி
-
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் கனடா !
2024 ஆம் ஆண்டில் மகிழ்ச்சியான G7 நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.இந்த ஆண்டுக்கான குறித்த தரவரிசையை WHR (World Happiness Report) வெளியிட்டுள்ளது. G7 நாடுகளின் ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியின் அடிப்படையில், எல்லா வயதினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டதாகும். G7 நாடுகள் பட்டியலில் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில், பின்லாந்து முதல் இடத்தைப் பிடிக்க…
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் : மைத்திரி வாக்குமூலம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே செயற்பட்டதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 2019ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா அதிபராக பதவி வகித்த போதே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.அண்மையில் கண்டிக்கு பயணம் செய்திருந்த அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் யார் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக…
-
எரிபொருள் விலை குறைப்பு!
இன்று நள்ளிரவு (31) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 95 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாவாகும். மண்ணெண்ணெய் லீட்டருக்கு 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலை மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
-
சற்றுமுன்னர் மட்டக்களப்பில் கோர விபத்து!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.விபத்தில் சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு…
-
இலங்கை – இந்திய நில இணைப்பு: புதுடில்லியில் நாளை பேச்சுகள் ஆரம்பம்
இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சுகள் நீண்டகாலாக இருநாட்டு அரசாங்கங்களும் இடையில் உள்ளது. கடந்த காலங்களில் இவை வெறும் கருத்துகளாக மாத்திரம் இருந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை மட்டத்திற்கு இந்த விடயம் நகர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதுகுறித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். தனுஷ்கோடி, தலைமன்னார் இணைப்பு இந்த சந்திப்பின் பின் கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி,…
-
ஈஸ்டர் படுகொலை நூல் !
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன – மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா இடம்பெற்றுள்ளது. நூலின் முதல் பிரதிகள் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளிற்கு வழங்கி வைத்ததைத் தொடர்ந்து, சர்வமத தலைவர்களுக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது. கொலைக்குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் பிள்ளையானின் இந்த செயற்பாடு பலரது விமர்சனத்திற்குள்ளாகியது.
-
“ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்தேன்” உண்மையை போட்டுடைத்த மைத்திரி !
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தமக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கருத்து வெளியிட்டதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தொடர்பில் பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கூறியவை, “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நான் நேற்று அந்த அறிக்கையை வெளியிட்டேன். உத்தரவு கிடைத்தால், இரகசிய சாட்சியத்தை வழங்க எதிர்பார்த்துள்ளேன்.அது வேறு…
-
வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பில் முறைப்பாடு!
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் இன்று கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி மற்றும் சிறிலங்கா காவல்துறையினரது தமிழர்களுக்கு எதிரான இனவாத ஒடுக்குமுறைகளுக்கு துணைபோவதாக அமைந்துள்ள காரணத்தினாலேயே கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியுடன் நேரில் சந்தித்து சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்…
-
மைத்திரி: ஆறு மணித்தியாலம் சி.ஐ.டியிடம் வாக்குமூலம்! யார் சூத்திரதாரி என தெரியும் என்கிறார்!
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் வெளியேறியுள்ளார். விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து பிரதான நுழைவாயிலில் வெளியேறாது மற்றுமொரு வழியே வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று காலை 10.30 மணியளவில் சாட்சியம் வழங்க அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தார்.