Category: முக்கிய செய்தி
-
கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற விரும்புவோருக்கான முக்கிய அறிவிப்பு!
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பானது 2024 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கட்டண உயர்வானது கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின் படி அறிமுகப்படுத்தப்படுவதாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
-
சட்ட விரோதமாக மருந்து பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!
கல்முனையில் கடற்படை மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனைக்காக மருந்துகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.63 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து 5,033 மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மருதமுனையை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை உணவு மற்றும் மருந்துப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக…
-
290 ரூபாவை நெருங்கும் அமெரிக்க டொலர்!
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(05.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (05.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.28 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 225.59 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது
-
இலங்கைக்கு நேரே 10 நாட்களுக்கு உச்சம் கொடுக்கப்போகும் சூரியன்!
ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 15 வரை இலங்கைக்கு மேலே சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை நாளைய தினம் (05) நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனம்…
-
ஈழத்தமிழர்களை இழிவாக பேசிய தமிழ் பெண்ணுக்கு நடுவீதியில் சம்பவம்!
ஈழத்தமிழர்களையும் அவர்களுடைய விடுதலை போராட்டத்தையும் இழிவாக பேசிய பெண் ஒருவர் நடுவீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புலம்பெயர்நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,பிரான்ஸில் வசிக்கும் சுஜி என்ற இலங்கை தமிழ் பெண் தனது டிக் டொக் பக்கத்தில் ஈழத்தமிழர்களின் தலைவர் பிரபாகரன் பற்றியும் அவர்களது விடுதலைப் போராட்டம் பற்றியும் இழிவாக அநாகரிகமான வார்த்தைகளால் பேசி காணொளி பதிவிட்டுள்ளார்.இந்தநிலையில், இவரது காணொளியால் கோபமடைந்த அங்கு வசிக்கும் ஈழத்தமிழ் மக்கள் குறித்த பெண்ணை வீதியில் வைத்து…
-
குறைக்கப்படவுள்ள விசிட்டர் வீசா!
கனடா செல்லும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.தற்காலிக விசாவில் நாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு கனடாவின் மக்கள் தொகையில் 2 சதவீதமானவர்களே தற்காலிக குடியேறியவர்களாகும்.கனேடிய மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் தற்காலிகமாக குடியேறியவர்களாகும்.இது நாம் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டிய ஒன்றென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வருடத்தில் விசிட்டர் விசாவில் இலங்கையர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் கனடாவுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை…
-
விசாரணை முடிந்து தாயகத்திற்க்குள் கால் வைத்த மூவர்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசாரணை இடம்பெற்றது பின்னர் இரண்டு மணித்தியாலங்களின் பின்பு விசாரணை முடிவுற்றதும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர்.
-
இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமாரிடம் விசாரணை !
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர்.
-
பாடசாலையில் இலவச மதிய உணவுதிட்டம் !
பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகளுக்காக மதிய உணவு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நேற்றிலிருந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் தொடக்கம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவோம், பள்ளிக்கு வரும் ஒரு பிள்ளை, எனக்கு பசிக்கிறது என்று கூறுமானால், பள்ளி என்னும் சமுதாயம் மற்றும் நாடு என்னும் முறையில், நாம் எல்லோரும் செய்யவேண்டிய வேலை இன்னமும் நிறைய இருக்கிறது என்று பொருள் என்று…
-
இலங்கையில் அதிகரிக்கும் வறுமை விகிதங்கள் : உலக வங்கி சுட்டிக்காட்டு
இலங்கை இன்னும் அதிகரித்த வறுமை நிலைகள், வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் சந்தை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது என்று உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் கடுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் 2024ஆம் ஆண்டில் 2.2வீத மிதமான வளர்ச்சியைக் காணும் என்றும் ஸ்திரத்தன்மையின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.