Category: முக்கிய செய்தி
-
தமிழரசு கட்சியில் மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை!
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சிக்கு இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத்துத் தெரிவிக்கையில், தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி…
-
வவுனியாவில் பேருந்து சாரதி கைது!
வவுனியாவில் (Vavuniya) மதுபோதையில் தனியார் பேருந்தினை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்து பொலிஸாரினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதுடன் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வவுனியா மாவட்டத்திலும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, மதுபோதையில் வாகனத்தினை செலுத்திய குற்றச்சாட்டில்…
-
தமிழர்கள் தேர்தலை முற்றாக புறக்கணிக்க வேண்டும் : கஜேந்திரன் வலியுறுத்து!
ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Kajenthiran) தெரிவித்துள்ளார். ஐனாதிபதி தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் பகிஷ்கரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொது வேட்பாளரை நிறுத்துவது மற்றும் பகிஸ்கரிப்பது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 75 வருடங்களாக…
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போதைமாத்திரைகளை உட்கொண்டு அவற்றை கடத்த முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவரை இலங்கை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 38 வயதான மடகாஸ்கர் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் சுமார் 75 கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் பக்கெற்றுக்களை விழுங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ. 35 மில்லியன் ஆகும். கொக்கைன் எனப்படும் போதைப்பொருளை மாத்திரைகள் வடிவில் சிறு பொதிகளாக சுற்றி விழுங்கியுள்ளார். இதனையடுத்து…
-
பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில்!
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணிலைக்(Ranil Wickremesinghe) களமிறக்குவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில்(Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைகளை மாற்றியதில்லை. ஆட்சியை இழந்தாலும் தனது கொள்கைகளை கடைப்பிடித்தார். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வரவும் உழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இம்முறை கட்சி சார்பற்ற…
-
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டத்தில் குழப்பம்!
வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் குழப்பம் காரணமாக இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மட்ட தெரிவுகளுக்கான பொதுக்கூட்டம் இன்று (12.04.2024) காலை ஒலுமடு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கூட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக சிவசேனை அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையிலான குழு வருகை தந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்து குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவசேனை முன்னிலையில் நிர்வாகத் தெரிவு…
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மூன்று தமிழர்கள்!
வெளிநாட்டிலிருந்து வந்த மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களே குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சில பொருட்களுக்கு சுங்கவரி செலுத்தாமல் கொண்டு வந்தமை அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது.
-
கொழும்பில் 6 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
கொழும்பில் 1 கிலோ 105 கிராம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 06 கோடி ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் அவர் டுபாயில் (Dubai) தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெசல்வத்த தினுகவின் சகா எனவும் தெரியவந்துள்ளது.
-
பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு!
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இன்று (08.04.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருட பிறப்பை முன்னிட்டு இந்த விலை குறைப்பை லங்கா சதொச நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 300யினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 850 ரூபாவாகும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.…
-
துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!
இரத்தினபுரி – மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். உயிரிழந்த இருவரும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளனர்