Category: முக்கிய செய்தி
-
நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கு: மன்றில் இல்லாமல் போன சாட்சியம்!
நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் , நேற்றையதினம்(25) நடைபெற்றது. அதன் போது , நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக அக்காலத்தில்…
-
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது!
வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது இன்று (25.04.2024) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1000 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் இவை விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா போன்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
சிவனொளிபாதமலையில் காணமல்போன இளைஞன் உயிருடன் மீட்பு!
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில் மலையில் உச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்த இளைஞன் மூன்று நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிவனொளிபாத மலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லதன்னி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் இன்று (24) காலை இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டு தோட்ட தொழிலாளர்கள் குழுவினால் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
-
நீதிபதி இளஞ்செழியனிற்கு யாழ் மேல் நீதிமன்றம் அழைப்பாணை!
நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கு நீதிபதி இளஞ்செழியனுக்கு அழைப்பு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றம் இந்த அழைப்பு கட்டளையை பிறப்பித்துள்ளது.இதன்படி நாளை(24.04.2024) புதன்கிழமை நீதிமன்றில் சாட்சியம் அளிக்க முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த 22.07.2017 அன்று நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
-
கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
கனடாவிற்கு வரும் புதிய குடியேற்றவாசிகளுக்கான முக்கியமான அம்சங்களில் ஒன்று, அவர்கள் எந்த நகரத்தில் குடியேறுவது சிறந்தது என்பதை தீர்மானிப்பது. அதன்படி, அவை வேலை வாய்ப்புகள், அத்தியாவசிய சேவைகள், பல்வேறு கலாச்சார சலுகைகள் மற்றும் வலுவான சமூக உறவுகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. இந்நிலையில் கனடாவிற்கு புலம்பெயர உள்ளவர்கள் குடியேற சிறந்த பத்து நகரங்களின் பட்டியலொன்றை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.குறித்த பட்டியலில் உள்ளடங்கும் நகரங்களும் மாகாணங்களும் பின்வருமாறு, 1. ரொறன்ரோ – ஒன்டாரியோ மாகாணம் 2. வான்கூவர் – பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணம்…
-
இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை!
ஐந்தாண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் பொதுமக்களுக்கு எதிரான மிக மோசமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட 279 பேர் விடயத்தில், “பொறுப்புப் பற்றாக்குறையை” சரிசெய்து நீதியை வழங்குமாறு, ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு யார் காரணம் என்பதை தீர்மானிக்க “முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை” நடத்தப்பட வேண்டும் என்று நாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட தூதுவரான Marc-Andre Franche கொழும்பில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் வலியுறுத்தினார். குறித்த…
-
இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் கடுமையாகும் சட்டம்
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் மோசடி செய்யும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். சுற்றுலா பயணிகளிடம் அதிகளவான கட்டணங்கள் அறவிடும் ஆட்டோ சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
-
நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-
கடலில் குழந்தை பிரசவித்த பெண்!
யாழ்ப்பாணம் (Jaffna) – நயினாதீவை (Nainativu) சேர்ந்த பெண்ணொருவர் கடலில் பயணித்தவாறு குழந்தை பிரசவித்துள்ளார். இந்த சம்பவமானது, நேற்றைய தினம் (17.04.2024) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததன் காரணமாக பொதுமக்கள் பெண்ணை போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி…
-
இலங்கையில் இளம் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்!
மாத்தளையில் கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டு பெண் ஒருவர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.கந்தேநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுனுகல பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், பெண்ணின் சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தேநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.