Category: முக்கிய செய்தி

  • வடமராட்சி சாலை கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட ஐவர் கைது!

    வடமராட்சி சாலை கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட ஐவர் கைது!

    வடமராட்சி கிழக்கு சுண்டிக் குளத்திற்கும் சாலைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர்  மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை இரண்டு படகுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில் தொடர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

  • யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் கைது!

    யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் கைது!

    யாழ். தெல்லிப்பழையில்(Jaffna) உயிரிழந்த குடும்பப் பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழையிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது கொலையா? தற்கொலையா? என ஆராயப்பட்ட நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் 16 வயதுடைய மகன் மீது சந்தேகம் வெளியிட்டிருந்தார். கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையான மேற்படி மகன், தாயாரின் சடலம் மீட்கப்பட்ட பின்னர் தலைமறைவான நிலையில், இன்று…

  • Live| தமிழீழத் தேசியத் தலைவரின் இதயத்தில் இடம் பிடித்த மாமனிதர் ஈழவேந்தன் இறுதி அஞ்சலி நேரலை

    Live| தமிழீழத் தேசியத் தலைவரின் இதயத்தில் இடம் பிடித்த மாமனிதர் ஈழவேந்தன் இறுதி அஞ்சலி நேரலை

    தமிழீழத் தேசியத் தலைவரின் இதயத்தில இடம் பிடித்த மாமனிதர் ஈழவேந்தன் இறுதி அஞ்சலி நேரலை

  • உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: மைத்திரி இரண்டாவது தடவையாக வாக்குமூலம்!

    உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: மைத்திரி இரண்டாவது தடவையாக வாக்குமூலம்!

    2019 ஆம் ஆண்டு நாட்டை பதற்றத்துக்கு இட்டுச்சென்ற உயர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் (Easter attack) தொடர்பில் இரண்டாவது தடவையாக வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்றையதினம் (03.05.2024) சுமார் இரண்டு மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த மார்ச் 25 ஆம் திகதி சுமார் ஐந்து மணிநேரம் அவர் தமது வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

  • வாகன இறக்குமதிக்கான அனுமதி! முதலில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்!

    வாகன இறக்குமதிக்கான அனுமதி! முதலில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்!

    வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கும் போது முதலாவது பொது போக்குவரத்து வாகனங்களுக்கே அனுமதியளிப்போம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், இலங்கையின் வாகன தேவைகளை நான்கு வகைகளாக பிரித்திருக்கின்றோம். முதலாவதாக பொது போக்குவரத்துக்கான வாகனங்கள், பேருந்து, லொறி போன்றவையைக் குறிக்கும். இரண்டாவது பொது தேவைக்காக மக்களினால் பயன்பபடுத்தப்படுகின்ற வாகனங்கள். உதாரணமாக மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி போன்றவற்றை குறிப்பிடலாம்.

  • கனேடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

    கனேடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

    கனேடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக அதிகரித்திருந்தது. மேலும், கடந்த பெப்ரவரி மாதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 வீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரியளவு மாற்றங்கள் பதிவாகாது என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20 துறைகளில் 12 துறைகளில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக…

  • கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

    கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

    கொவிஷுல்ட் (Covishield) தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) தடுப்பூசி நிறுவனம் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தடுப்பூசியானது பல்வேறு வழக்குகளில் உயிரிழப்புக்கள் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது சிலருக்கு குருதி உறைவு நோயை ஏற்படுத்தியுள்ளதோடு குருதிக் கலங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  • நாளை யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள எரிக் சொல்ஹெய்ம்!

    நாளை யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள எரிக் சொல்ஹெய்ம்!

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) தற்போதைய சர்வதேச காலநிலை ஆலோசகரும் முன்னாள் நோர்வே வெளி விவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம்(Erik Solheim) மற்றும் நோர்வே நாடாளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இருவரும் நாளை (30.04.2024) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.யாழ்ப்பாணம் அல்லப்பிட்டியில் அமைந்துள்ள தப்ரபேன் நிறுவனத்தின் கடல் உணவு தொழிற்சாலைக்கு இவர்கள் விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • க.பொ.த சாதாரணதர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

    க.பொ.த சாதாரணதர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

    கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (26.04.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை தேர்வு மே இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என…

  • யாழில் பாரிய காணி மோசடி – அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்!

    யாழில் பாரிய காணி மோசடி – அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்!

    யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியே இவ்வாறு மோசடியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியை பராமரிக்கும் நோக்கில் உறவினர் ஒருவரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. குறித்த காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய…