Category: முக்கிய செய்தி

  • பயிற்சியில் ஈடுபட்ட இரு விமானங்கள் மோதி விபத்து: இருவர் பலி!

    பயிற்சியில் ஈடுபட்ட இரு விமானங்கள் மோதி விபத்து: இருவர் பலி!

    கனடாவில் விமானப் பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மனிடோபா (Manitoba), ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில் குறித்த இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வின்னிபெக்கில் (Winnipeg) இருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில், தெற்கு விமான நிலையம் அருகே இருவரும் விமானத்தைத் தரையிறக்க முயன்றவேளை, 400 மீற்றர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்துக்குள்ளான விமானங்கள் தீப்பிடித்ததில், சம்பவ…

  • செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

    செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

    யாழ். செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில், தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்றில் 63 மனித எலும்புக்கூடுகளும், தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டில் 2 மனித எலும்புக்கூடுகளுமாக மொத்தமாக 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி…

  • ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு: ஆட்டம் காணப்போகும் இலங்கை!

    ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு: ஆட்டம் காணப்போகும் இலங்கை!

    இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விகித அறிவிப்பு குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து ஜனாதிபதி அநுர குமாரவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை உள்ளிட்ட மேலும் ஏழு நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி, அவர்களது நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த புதிய வரி கட்டுப்பாடுகள் ஆகஸ்ட்…

  • முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத 679 இராணுவ வீரர்கள் கைது

    முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத 679 இராணுவ வீரர்கள் கைது

    முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத 679 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் நேற்று (5) வரை பொலிஸார் மற்றும் இராணுவப்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களின் எண்ணிக்கை 535 ஆகும். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 63 கடற்படை வீரர்களும் 81 விமானப்படை வீரர்களும் அடங்குவர். கடந்த மாதம் 22…

  • யோஷித்த ராஜபக்சவின் பாட்டி  கைது

    யோஷித்த ராஜபக்சவின் பாட்டி கைது

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (05) குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

    இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

    இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவுடன் இன்று (04) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், எதிர்காலத்தில் இலங்கை மக்கள் நாட்டை விட்டு வெளியேறாத நிலையை அடைவார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், முந்தைய நெருக்கடியின்…

  • கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க  காரணம்  அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரே

    கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க காரணம் அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரே

    கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க முதலில் காரணமாக அமைந்தது அந்த அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர்தான் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “அப்போது 2022 அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணம் என்ன? அந்த நேரத்தில் அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர், நாட்டில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே எரிபொருள் இருக்கும் என்று கூறினார். பின்னர் மக்கள் பீப்பாய்களாக எரிபொருளை பெற்றுக்கொண்டனர். கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க முதலில்…

  • ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

    ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

    ஜப்பானில் சிறப்புத் திறன் கொண்ட பணியாளர் (SSW) திட்டத்தின் கீழ், தாதியர் பராமரிப்புத் துறையில் இலங்கையர்கள் பல வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த வேலைகளுக்குத் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யும் தொழிலாளர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பணியகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஐ.எம். ஜப்பான் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 18-35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலை வாய்ப்புகளை இலவசமாகப் பெற தகுதி…

  • ஜனாதிபதியின் வெளிநாட்டு பயண செலவில் சந்தேகங்கள் இருப்பின்  அரசாங்கத்திற்கு சவால் விட முடியும் பிரதி அமைச்சர் தெரிவிப்பு

    ஜனாதிபதியின் வெளிநாட்டு பயண செலவில் சந்தேகங்கள் இருப்பின் அரசாங்கத்திற்கு சவால் விட முடியும் பிரதி அமைச்சர் தெரிவிப்பு

    ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எதிர்க்கட்சியினர் அது தொடர்பிலான தகவல்களை ஆராய்ந்து அரசாங்கத்திற்கு சவால் விட முடியும் என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். பாதாள உலகக் குழு என்பது எங்களால் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று அல்ல, அரசியல் தொடர்புகளுடனேயே இவை ஆரம்பிக்கப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கருத்து தெரிவித்த நாமல் கருணாரத்ன, “தற்போது அரசாங்கம் குற்றம் சுமத்துபவர்களே…

  • இன்று 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம்

    இன்று 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம்

    2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கான செலவினத் தலைப்புகளில் இன்று (28) குழு நிலை விவாதம் இடம்பெறுவுள்ளன. குழு நிலை விவாதம் நேற்று (27) தொடங்கியது. இது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறும்.