Category: பொழுது போக்கு செய்திகள்
-
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் மில்லியன் டொலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சசிக்குமார், சிம்ரன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. அண்மையில் இப் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. வித்தியாசமான கதைக்களத்தில் சசிக்குமார் மற்றும் சிம்ரன் இருவரும் பேசும் இலங்கைத் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான முகை மழை பாடல் வெளியாகியுள்ளது.
-
சூரியின் ‘மாமன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர்
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மாமன் எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்ய லட்சுமி இப் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்கிறார். குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு இப் படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாமன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
-
சிம்புவின் புதிய படத்தில் சாய் பல்லவி தான் கதாநாயகியா!
கொரோனா காலத்தை பயன்படுத்தி தனது உடல்எடை குறைத்து ஆளே மாறிய சிம்பு அதன்பின் நிறைய வெற்றிப்படங்களை கொடுத்தார்.மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என நிறைய ஹாட்ரிக் வெற்றிகள் வெளியான நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது தல் லைஃப் படத்தில் முக்கிய ரோலில் சிம்பு நடித்துள்ள நிலையில் அவரது புதிய படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்க…
-
கோபமாகி ஷூட்டிங்கை திடீரென ரத்து செய்துவிட்ட Rj பாலாஜி!
சூர்யாவின் முந்தைய படமான கங்குவா பெரிய தோல்வி அடைந்த நிலையில் அவரது அடுத்த படங்கள் மீது தான் பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ரெட்ரோ படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்து சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கும் காமெடி நடிகர் கோதண்டம்…
-
அஜித்துக்கு போன் செய்து விஜய் சொன்ன வார்த்தை..
நடிகர் அஜித் கடந்த சில வாரங்களுக்கு முன் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் தனது குழுவுடன் பங்கேற்று, மூன்றுவது இடத்தை பிடித்து வெற்றிபெற்றார். இவருடைய வெற்றியை அனைவரும் கொண்டாடினார்கள். திரையுலக பிரபலங்களில் இருந்து அரசியல்வாதிகள் வரை பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனால், நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை.அதே போல் சமீபத்தில் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அப்போது கூட, விஜய்யின் இருந்து எந்த ஒரு வாழ்த்தும் வரவில்லை. அஜித்தின் நெருங்கிய…
-
லோகேஷ் கனகராஜுடன் இணையும் புதிய கூட்டணி!
லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார். அதன் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அதை முடித்துவிட்டு லோகேஷ் யாருடன் கூட்டணி சேர போகிறார் என பல செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் தனுஷ் உடன் தான் லோகேஷ் அடுத்து கூட்டணி சேர போகிறாராம். அந்த படத்தை 7 ஸ்கிறீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
-
விஜய் படத்தின் ரிலீஸ் திகதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். மேலும் இப்படம் விஜய்யின் கடைசி படமாகும்.இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வர, கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில்தான் இப்படத்திலிருந்து போஸ்டர்களை படக்குழு வெளியிட்டனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பை…
-
விஷால் கூட திருமணம் அவரை நான் காதலிக்கிறேன்… ஓபனாக பேசிய
தமிழ் சினிமாவில் நாடோடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா.காது கேட்காமல் வாய் பேச முடியாமல் இருந்தும் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் அசத்தி இருப்பார். தமிழை தாண்டி பிற மொழி படங்களிலும் நடித்து மக்கள் கவனத்தை பெற்றுள்ளார்.சமீபத்தில் இவருக்கு பிரபல நடிகருடன் காதல், விரைவில் திருமணம் என்ற வதந்தி பரவியது. இதுகுறித்து ஒரு பேட்டியில் அபிநயா கூறுகையில், நான் இப்போ ரிலேஷன்சிப்ல தான் இருக்கேன்.என்னோட சின்ன வயசு நண்பன் தான் பாய் பிரண்ட்,…
-
தண்டேல் பட ட்ரெய்லர் வெளியானது
சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கீதா ஆர்ஸ்ட் சார்பாக பன்னிவாஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் தண்டேல். இப் படத்தில் நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஸ்ரீகாகுளத்திலுள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
-
‘ஒரு ட்ரிப் போவம்’ என்ற நகைச்சுவை நிறைந்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படுகின்றது
இலங்கை ‘பகிடியா கதைப்பம்’ புரடக்ஷன்ஸ் தயாரித்த ‘ஒரு ட்ரிப் போவம்’ என்ற நகைச்சுவை நிறைந்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படுகின்றது இலங்கையில் இயங்கிவரும் ‘பகிடியா கதைப்பம்’ புரடக்ஷன்ஸ் தயாரித்த ‘ஒரு ட்ரிப் போவம்’ என்ற நகைச்சுவை நிறைந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 6ம் 7ம் திகதிகளில் கனடாவில் திரையிடப்படுகின்றது. திரையரங்கில் திரையிடப்படவுள்ள இந்த இலங்கையில் தயாரான நகைச்சுவை நிறைந்த திரைப்படத்தை கனடா வாழ் நகைச்சுவையை விரும்பும் ரசிகர்கள் பார்த்து மகிழ வேண்டும் என தயாரிப்பாளர்கள் அழைக்கின்றார்கள். கட்டணம் 15…