Category: பிரதான செய்தி
-
இலங்கை – இந்திய தேர்தலும் தமிழ் தேசியமும்
தேர்தல் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு விடியப் போகிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் 2024 தேர்தல் நடக்கவிருப்பது திட்டவட்டமானது. நடக்கவிருக்கும் இந்த மூன்று நாடுகளின் தேர்தல்களிலும் அமெரிக்காவின் தேர்தல் ஆனது இலங்கையிலோ அல்லது ஈழத் தமிழர்களின் அரசியலிலோ எத்தகைய தாக்கத்தையும் செலுத்த மாட்டாது. ஆனால் இந்தியாவின் தேர்தல் என்பது இலங்கைத் தேர்தலில் செல்வாக்கு செலுத்தக் கூடியது. ஈழத் தமிழர்களின் அரசியலிலும் அதன் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியது. இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல், இந்திய தேர்தல் ஆணையத்தின் நிகழ்ச்சி நிழலின்படி…
-
என்றும் மரணிக்காத காசாவின் குரல் – ரிவாட் அலாரீர் :
காசா பல்கலை பேராசிரியர் இஸ்ரேலால் படுகொலை ! இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட கவிஞர், பேராசிரியர் னுச.ரிவாட் அலாரீரை (னுச. சுநகயயவ யுடயசநநச) உலகம் வாழ் கவிஞர்களும், பாலஸ்தீனியர்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர். புகழ்பெற்ற கவிஞர், கல்வியாளர் காசாவின் குரலாக என்றும் மரணிக்காத குரலாக விளங்கியவர். என்றும் மரணிக்காத காசாவின் குரல் : பாலஸ்தீனக் கவிஞரும், காசாவிலுள்ள பல்கலைக்கழகப் பேராசிரியருமான ரிவாட் அலாரீர் (சுநகயயவ யுடயசநநச) கடந்த புதன் இஸ்ரேல் காசா மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.…
-
ஈழத்தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது…
ஈழத்தமிழினம் என்றைக்கும் ஒரு இனமாக அல்லது ஒரு சமூகமாக ஒற்றுமையாக ஒரே கொள்கையுடன் – ஒரே குறிக்கோளுடன் சிந்தித்ததும் கிடையாது ஓரணியாக பயணித்ததும் கிடையாது என்பதற்கு பல வரலாற்று நிகழ்வுகளும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அது இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது. ஈழத்தமிழரின் அகிம்சை போராட்டங்களாக இருக்கட்டும் ஆயுத போராட்டமாக இருக்கட்டும் அனைத்து போராட்டங்களும் நலிவடைந்து போனதற்கு மேற்கூறிய இனத்தின் குணாதிசயங்களே காரணமாக இருந்திருக்கின்றன. ஆனாலும் இத்தனை படிப்பினைகளை கற்றபின்னரும் ஒரு இனம் மீண்டும் மீண்டும் அந்த தவறுகளை செய்துகொண்டிருப்பது…
-
மாற்றுத்தலைமைக்கான அவசியம்
ஈழத் தமிழர்களின் மனித உரிமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட விவாதம் ஒன்று அந்நாட்டின் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இடம்பெறிருக்கிறது.மேற்படி விவாதத்தில் ஈழத் தமிழர்கள் தொடர்பிலும் அவர்கள் எதிர்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே, வன்முறை மற்றும் இனப்படுகொலையின் சுழற்சியுடன் துரதிர்ஷ்டவசமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் இன்னும் உயிர் பிழைத்த தமிழர்களைத் துன்புறுத்துவதாக தெரிவித்தார். மேலும்,இலங்கையில், இனப்படுகொலை தமிழ் சமூகத்தின் மீது பேரழிவு விளைவை ஏற்படுத்தியது.…
-
இந்தியா-சீனாவின் பனிப்போரும் ஈழத்தமிழரின் எதிர்காலமும்
ஈழத்தமிழர்களை ஸ்ரீலங்காவின் பேரினவாதிகள் மாத்திரமல்ல சர்வதேச நாடுகளும் மிரட்ட ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக சீனா – இந்தியாவின் பனிப்போர் ஈழத்தமிழருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் தற்சமயம் சூழத்தொடங்கியிருக்கிறது. ஈழத்தமிழரின் மிக முக்கிய தளமாக விளங்கும் பாக்கு நீரிணை இந்தியா மற்றும் சீனாவின் பலப்பரீட்சைக் களமாக மாறிவருகிறது என்ற செய்தி அண்மைக்காலமாக அடிபடுகிறது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. அண்மைக்காலமாக சீனா தமிழர் தாயகம் தொடர்பில் அதிக கரிசனையை கொண்டு செயற்படுவதாக தெரிகிறது. கடந்தவாரம் கூட இலங்கைக்கான…
-
முள்ளிவாய்க்கால் முதல் காஸா வரை சர்வதேசத்தின் அலட்சியமும் தோல்வியும்
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் மனித பேரவலம் முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசு நடத்திய படுகொலைகளை நினைவுபடுத்துகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய படுகொலையை தமிழர்கள் மட்டுமல்ல உலக மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசிய இலங்கை இராணுவம்இ பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று தனது கொலை வெறியை தீர்த்துக்கொண்டது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஏற்படுத்திய ரணம் இன்றுவரை ஆறாமல் இருக்கிறது. அதற்கான நீதியும் இன்றுவரை கிடைத்தபாடில்லை.…