Category: பிரதான செய்தி
-
பயிற்சியில் ஈடுபட்ட இரு விமானங்கள் மோதி விபத்து: இருவர் பலி!
கனடாவில் விமானப் பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மனிடோபா (Manitoba), ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில் குறித்த இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வின்னிபெக்கில் (Winnipeg) இருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில், தெற்கு விமான நிலையம் அருகே இருவரும் விமானத்தைத் தரையிறக்க முயன்றவேளை, 400 மீற்றர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்துக்குள்ளான விமானங்கள் தீப்பிடித்ததில், சம்பவ…
-
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
யாழ். செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில், தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்றில் 63 மனித எலும்புக்கூடுகளும், தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டில் 2 மனித எலும்புக்கூடுகளுமாக மொத்தமாக 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி…
-
ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு: ஆட்டம் காணப்போகும் இலங்கை!
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விகித அறிவிப்பு குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து ஜனாதிபதி அநுர குமாரவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை உள்ளிட்ட மேலும் ஏழு நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி, அவர்களது நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த புதிய வரி கட்டுப்பாடுகள் ஆகஸ்ட்…
-
பாரதியின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்
மூத்த பத்திரிகையாளர் இராசநாயகம் பாரதியின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு எனவும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் பெரும் இடைவெளியை பாரதியின் இழப்பு ஏற்படுத்தியிருக்கின்றது எனவும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம் தெரிவித்துள்ளது. மேலும் ஒன்றியம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில், “ஞாயிறு தினக்குரல் , தினக்குரல் இணையம் ஆகியவற்றின் முன்னாள் பிரதம ஆசிரியரும், வீரகேசரி வடபிராந்திய பதிப்பின் ஆசிரியருமான மூத்த பத்திரிகையாளர் இராசநாயகம் பாரதியின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சிக்காகவும் தமிழ் பேசும் …
-
யோஷிதவின் டெய்சி பாட்டிக்கு வெளிநாட்டு பயணத்தடை!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு (Daisy Forrest) கடுவலை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.டெய்சி பொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் சந்தேக நபர் என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் உத்தரவின் பேரிலேயே இந்த குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம்!
இந்த ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம் (10) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கிறார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது. இவ் விஜயத்தின் போது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்க உள்ளார். மேலும், மாநாட்டில் பங்கேற்கும்…
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை; டொனால்ட் டிரம்ப் கையெழுத்து
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார். அமெரிக்காவின் புதிய உத்தரவு அந்த வரிசையில் தான் தற்போது சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்து இருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை நீதிமன்றம்…
-
கனடாவில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்த நபர்
கனடாவில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறித்த நபர் பெண்களை காதலிப்பதாக பாசாங்கு செய்து அவர்களிடமிருந்து பெரும் தொகை பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களை பயன்படுத்தி இந்த மோசடிகள் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.…
-
வரிவிதிப்பினால் கடும் கோபம்; டிரம்புக்கு சீனா விடுத்துள்ள எச்சரிக்கை
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வரியை உயர்த்தி தவறு செய்துவிட்டதாக டிரம்புக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் வரி இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும்…
-
மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய அதிகாரி பணிநீக்கம்
இரத்மலானை பகுதியில் மதுபோதையில் பொலிஸ் ஜீப் ஒன்றை செலுத்தி, முச்சக்கர வண்டியுடன் மோதிய பின்னர் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டியும், அதனுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் ஜீப் வாகனமும் காணப்பட்டன. விபத்திற்குப் பிறகு, ஜீப் வாகனம் நிற்காமல் தொடர்ந்ததாகவும் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை…