Category: கனடா செய்திகள்
-
கனேடிய சந்தையில் கார்களின் விலையை கணிசமாக உயர்த்தும் டெஸ்லா!
டெஸ்லா (Tesla) நிறுவனம் எதிர்வரும் பெ்பரவரி 1 முதல் கனேடிய சந்தையில் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தது. இது நுகர்வோரை கணிசமாக பாதிப்படைய செய்யும் அறிவிப்பாகும். குறிப்பாக டெஸ்லாவின் மொடல் 3க்கான விலைகள் 9,000 கனேடிய டொலர்கள் ($6,254.78) வரை அதிகரிக்கலாம். அதே நேரத்தில் மொடல் Y வகைகளின் விலைகள் 4,000 கனேடிய டொலர்கள் வரை உயரும். மொடல் S மற்றும் X இன் அனைத்து வகைகளும் 4,000 கனேடிய டொலர்களாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. பில்லியனர்…
-
ட்ரம்பின் மிரட்டலுக்கு மிரண்ட கனடா… பேச்சின் தொனியை மாற்றிய கனடா பிரதமர் ட்ரூடோ
கனடா மீது 25 சதவிகித வரிகள் விதிக்க இருப்பதாக தொடர்ந்து மிரட்டி வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். அவர் வரி விதித்தால் கடுமையான பதிலடி கொடுப்போம் என கூறிவந்தார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ. ஆனால், தற்போது அவர் பேசும் தொனியே மாறிவிட்டது! அமெரிக்கா வரி விதித்தால், அவர்களுக்கு வலிக்கும் அளவில் பதிலடி கொடுப்போம் என எச்சரித்துவந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இப்போது அமெரிக்கா பொற்காலத்தை அடைவதற்கு ட்ரம்புக்கு உதவப்போவதாக பேச்சை மாற்றிவிட்டார். தனது பதவியேற்பு…
-
கனடாவில் பெண் மீது துப்பாக்கிச் சூடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்
கனடாவில் கனடாவின் மார்க்கம் பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பலம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டிலிருந்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்காண காணொளி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிதாரி பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் அந்தப் பெண் வீட்டை நோக்கி நடந்த போது பின்னால் சென்று…
-
ஒன்ராரியோ விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தந்தையும் சிறுமியும் மரணம்
கனடாவில் ஒன்ராரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக கொண்ட 40 வயதான தந்தையும் 3 வயது சிறுமியுமே உயிரிழந்துள்ளனர். கனடாவில் கடும் பனிப்பொழிவும் பனியால் வீதிகள் வழுக்குவதுமாக இருக்கிறது . இந்நிலையில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த வேளை ,வீதியில் வழுக்கி பள்ளத்தில் சென்று விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. விபத்தை அடுத்து பதறிய தந்தை தனது மகளை வாகனத்தில்…
-
ஸ்காப்ரோ தீ விபத்து தொடாபில் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு
கனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு மாத சிசு பலியான சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்காப்ரோவின் புஷ்மில் சதுக்கத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த வீட்டிலிருந்து 8 வயதான சிசு, 4 வயதான குழந்தை, 39 வயதான ஆண் மற்றும் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோர் மீட்கப்பட்டிருந்தனர். 39 வயதான நபர் தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. எட்டு மாத சிசு…
-
கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு கிடைக்கும் வாய்ப்பு!
கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கனடாவில் தற்காலிகமாக வதியும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்கும் போது கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தொழில் தகமை, பிரெஞ்சு மொழித் திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தற்காலிகமாக வதிவோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. தொழில் மற்றும் கல்வி நோக்கில் கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு துரித கதியில் நிரந்தர வதிவுரிமை கோரிக்கை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
-
கனடாவில் சிறுவனுக்கு வைன் விற்று சிக்கலில் மாட்டிய சங்கிலி நிறுவனம்!
கனடாவில் சிறுவன் ஒருவனுக்கு வைன் விற்பனை செய்த பிரபல நிறுவனமொன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி பல்பொருள் விற்பனை சங்கிலி நிறுவனங்களில் ஒன்றான லொப்லொவ் (Loblaws) நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமது நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் 16 வயது சிறுவனுக்கு வைன் விற்பனை செய்ததனை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவனுக்கு வைன் விற்பனை செய்த குற்றத்திற்காக ஏழாயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம்…
-
அல்பேர்ட்டாவில் வெளிநாட்டவர்களுக்கான தொழில் வாய்ப்பும் நிரந்தர வதிவுரிமையும்!
மாகாணத்தில் விருந்தோம்பல் தொழிற்துறையில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன. எதிர்வரும் 2035ம் ஆண்டளவில் மாகாணத்தின் சுற்றுலா கைத்தொழிற்துறையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அல்பேர்ட்டா மாகாணம் இதற்கென பிரத்தியேகமான ஓர் குடிவரவு திட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது. விருந்தோம்பல் தொழிற்துறைசார் தகுதியுடைய வெளிநாட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கனடாவில் ஏற்கனவே தற்காலிக அடிப்படையில் சுற்றுலாத்துறை தொழில்களில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டுப் பிரஜைகள், நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது.…
-
கனடா செல்ல ஆசைப்படுகிறீர்களா?: தொழில் வாய்ப்பை வழங்கும் முக்கிய மாநிலம்
உலகில் மிகப்பெரிய நாடுகளில் கனடாவும் ஒன்றும். இங்கு நிலப்பரப்புக்கு ஏற்ப மக்கள் தொகை இல்லை என்பதுடன், பலநாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களால் இங்கு தொழில்துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவுக்கு சென்றால் அகதி அந்தஸ்து கிடைப்பது உறுதியென அங்குள்ள புலம்பெயர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பல்வேறு சட்டவிரோதமான வழிகளை பின்பற்றியாவது கனடாவுக்கு செல்ல வேண்டுமென்பதில் உலகளாவிய ரீதியில் பலரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் வெளிநாட்டவர்களுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் நிரந்தர வதிவுரிமை பெறுவது குறித்த ஒரு…