Category: கனடா செய்திகள்

  • கனடாவில் கொலையுடன் தொடர்புபட்ட இருவர் கைது

    கனடாவில் கொலையுடன் தொடர்புபட்ட இருவர் கைது

    கனடாவில் படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கனடாவின் டொரன்டோ பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரொறன்ரோவில் இந்த ஆண்டில் பதிவான முதல் படுகொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மெடிசன் மற்றும் ப்ளூர் வீதிகளை அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த…

  • கனடா , மெக்சிகோ வரி விதிப்பை இடைநிறுத்தும் டொனால்ட் ட்ரம்ப் !

    கனடா , மெக்சிகோ வரி விதிப்பை இடைநிறுத்தும் டொனால்ட் ட்ரம்ப் !

    கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இந்த இரு நாடுகளுக்கும் இன்று முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 25 சதவீத வரி ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை அதேவேளை எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க மெக்சிகோவும்…

  • கனடிய பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்  அமெரிக்க ஜனாதிபதி

    கனடிய பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அமெரிக்க ஜனாதிபதி

    கனடிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலை நிலவி வருகின்றது. கனடிய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா 25 வீத வரியை விதித்துள்ளது. இந்த வரி விதிப்பிற்கு பதிலடியாக கனடாவும் அமெரிக்கா இறக்குமதிகள் மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. இவ்வாறான ஒரு பின்னணியில் இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது.  

  • இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை

    இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை

    10 மற்றும் 17வயதான இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபரும் பலத்த காயங்களுடன் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. என்ன காரணத்திற்காக இந்த படுகொலைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  • கனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி இளம்பெண் கொலை

    கனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி இளம்பெண் கொலை

    கனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி இளம்பெண் கொலை வழக்கு ஒன்று கடந்த ஆண்டு தொலைக்காட்சித் தொடராக வெளியானது. இந்நிலையில், அந்த இளம்பெண்ணைக் கொலை செய்த பெண் ஜாமீனில் வெளியிலிருந்த நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 1997ஆம் ஆண்டு, இந்திய வம்சாவளியினரான ரீனா விர்க் (Reena Virk) என்னும் இளம்பெண், ஒரு கூட்டம் பதின்மவயதுப் பெண்கள் மற்றும் ஒரு பையனால் கொல்லப்பட்டார். ரீனாவின் தந்தையான Manjit Virk இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர், தாய் Suman Virk, இந்திய கனேடியர்.…

  • கடும் நெருக்கடியில் கனடா : ட்ரம்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு

    கடும் நெருக்கடியில் கனடா : ட்ரம்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு

    கனடா (Canada) மீது வரி விதிப்பது தொடர்பில் தாம் ஏற்கனவே குறிப்பிட்டதை சனிக்கிழமை நிறைவேற்ற இருப்பதாக அமெரிக்க (United States)  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் நேற்று (30.01.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், மெக்ஸிகோவும் கனடாவும் வர்த்தக விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஒருபோதும் நல்லது செய்ததில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவை அவர்கள் மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தியுள்ளனர் என்றும்…

  • ட்ரக் வண்டி சாரதி மீது துப்பாக்கிச் சூடு!

    டிரக் வண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கெனடி மற்றும் ப்ரோக்ரஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சாரதி குறித்த டிரக் வண்டியின் சாரதி படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதன் பின்னரும் குறித்த ட்ரக் வண்டியின் சாரதி சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரையில் ட்ரக்கை செலுத்தி சென்றுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வாகனம் ஒன்றில் இருந்த நபர் குறித்த சாரதி மீது துப்பாக்கிச்…

  • டொரன்டோவில் விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!

    டொரன்டோவில் வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பஸ் சேவை இடைநிறுத்தம் தொடர்பில் டொரன்டோ போக்குவரத்து சேவை சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை சில பகுதிகளுக்கான போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பினை முதன்மையாக கருத்தில் கொண்டு இவ்வாறு சேவையை இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை சீர்கேடு காரணமாகவே இவ்வாறு சேவைகள்…

  • அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு ஆயத்தமாகும் கனடா அரசாங்கம்

    அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை கனடிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கனடாவின் ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். பெரும்பாலும் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில் இந்த வரி விதிப்பு காரணமாக பாதிக்கப்படக்கூடிய தரப்புக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் முனைப்புகளில் மத்திய அரசாங்கம்…

  • ஐந்து நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்த அரசாங்கம்!

    ஐந்து நாடுகளுக்கு கனேடிய பிரஜைகள் செல்ல வேண்டாம் என கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ், மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் மெக்சிகோவிற்கும் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வன்முறை, குற்றங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலேயே இந்த பயண எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கியூபாவில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாடு மற்றும் அடிப்படை தேவைகளின் குறைபாடுகள் காரணமாக கனடா அரசு பயணிகளுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி…