Category: கனடா செய்திகள்

  • கனடாவில் 15 வயது உடைய சிறுவனுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு

    கனடாவில் 15 வயது உடைய சிறுவனுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு

    கனடாவில் 15 வயது உடைய சிறுவன் ஒருவனுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கனடாவின் வோகன் பகுதியில் பெண் ஒருவரை படுகொலை செய்ததாக குறித்த சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காமினோ மற்றும் ரதர்புர்ட் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து கொண்ட கொண்ட போலீசார் குறித்த இடத்திற்கு சென்றபோது பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிடந்ததாகவும் அவரை மீட்டு வைத்தியசாலையில்…

  • அமெரிக்க கனடிய எல்லை பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் பலி;15 பேர் கைது

    அமெரிக்க கனடிய எல்லை பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் பலி;15 பேர் கைது

    அமெரிக்கா கனடிய எல்லை பகுதியில் இடம்பெற்ற எல்லை கடப்பு சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க மற்றும் கனடிய எல்லை பாதுகாப்பு படையினர் குறித்த கைதுகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் மூன்று இடங்களில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவிற்கும் கனடாவின் தென் அல்பர்ட் எல்லை பகுதிக்கும் இடையிலான பகுதியில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. நபர் ஒருவர் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் போலீசார் துரத்திச்…

  • கனடிய சந்தைலிருந்து மீள பெற்றுக் கொள்ளப்படும் வாகனங்கள்

    கனடிய சந்தைலிருந்து மீள பெற்றுக் கொள்ளப்படும் வாகனங்கள்

    கனடாவின் சந்தைகளில் இருந்து டொயோட்டா மற்றும் போர்ட் ரக வாகனங்கள் சில மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய போக்குவரத்து நிறுவனம் குறித்த வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் நான்கு மாடல் வாகனங்கள் இவ்வாறு சந்தையிலிருந்து மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. டொயோட்டா டொமெகா,டொயொட்டா ஹைலண்டர், டொயொட்டா கொரோலா மற்றும் டொயொட்டா க்ரோஸ் ஆகிய…

  • கனடாவில் பிரபல இந்திய பாடகரின் வீட்டைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு!

    கனடாவில் பிரபல இந்திய பாடகரின் வீட்டைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு!

    கனடாவில், பிரபல இந்திய பாடகர் ஒருவரின் இல்லத்தைக் குறிவைத்து இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பஞ்சாபி பாடகரான பிரேம் தில்லானின் குடியிருப்பைக் குறி வைத்தே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், ஜெய்பால் புல்லர் எனும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பலொன்று இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 2022 ஆம் ஆண்டு பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெயரையும் அந்தக் வெளியிட்ட ஒரு…

  • ரொறன்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

    ரொறன்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

    ரொறன்ரோவில் மோஸ் பார்க்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குயின் மற்றும் ப்ரோன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவரின் உயிரை காக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது பலன் அளிக்கவில்லை என உயிர் காப்பு பணியாளர்களும் போலீசாரும் தெரிவிக்கின்றனர். படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இலக்கான நபர் பற்றிய விவரங்களோ தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பற்றிய…

  • கனடாவில் ஓடும் வாகனங்கள் மீது கற்களை வீசிய இளைஞர்கள் கைது

    கனடாவில் ஓடும் வாகனங்கள் மீது கற்களை வீசிய இளைஞர்கள் கைது

    கனடாவில் ஓடும் வாகனங்கள் மீது கற்களை வீசிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 18 மற்றும் 17 வயதான இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பயணம் செய்த வாகனங்கள் மீது இவ்வாறு கற்கள் வீசி எறியப்பட்டுள்ளன. குறிப்பாக மார்க்கம் மற்றும் வித்சர்ச் பகுதிகளில் இந்த கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர்கள் இருவருக்கு எதிராகவும் சுமார் 31 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்தேக நபர்கள் இடமிருந்து ஆயுதம் ஒன்றும்…

  • கனடாவில் வீடு உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக எச்சரிக்கை

    கனடாவில் வீடு உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக எச்சரிக்கை

    கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யோர்க் பிராந்திய போலீசார் இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். அண்மையில் ரிச்மண்ட் ஹில் பகுதியில் குடியிருப்புகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையர்கள் பசை போன்ற ஒரு பதார்த்தத்தை பயன்படுத்தி கதவுகளை உடைத்து உள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யோர்க் பிராந்தியத்தில் இவ்வாறான இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு சம்பவங்களின் போதும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை என…

  • அமெரிக்காவுக்குள்  இருந்து கனடாவுக்குள் நுழைய முயன்ற 16 பேர்: ஒருவர் உயிரிழப்பு

    அமெரிக்காவுக்குள் இருந்து கனடாவுக்குள் நுழைய முயன்ற 16 பேர்: ஒருவர் உயிரிழப்பு

    அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவிலிருந்து புலம்பெயர்வோர் அமெரிக்காவுக்குள் நுழைவதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில வராங்களில் 16 பேர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை, கனடா அமெரிக்க எல்லையிலுள்ள Coutts என்னும் ஆல்பர்ட்டா மாகாண கிராமம் வழியாக, அமெரிக்காவுக்குள்ளிருந்து கனடாவுக்குள் ஒருவர் வாகனம் ஒன்றில் நுழைவதை கனேடிய பொலிசார் கவனித்துள்ளார்கள் அவர் தனது வாகனத்தில் தப்பியோட முயற்சிக்க, அவரது வாகனத்தின் டயர்களை பஞ்சர் செய்துள்ளார்கள் பொலிசார். உடனே அவர் தனது வாகனத்திலிருந்து இறங்கி…

  • அமெரிக்காவினை புறக்கணிக்க கனேடிய மக்கள்  முடிவு

    அமெரிக்காவினை புறக்கணிக்க கனேடிய மக்கள் முடிவு

    ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்து அவசர அவசரமாக பல நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது கனடா அரசு. ஆனால், கனேடிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவிலிருந்து போதைப்பொருட்களும், சட்டவிரோத புலம்பெயர்வோரும் அமெரிக்காவுக்குள் நுழைவதாகக் கூறி, அதனால் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்போவதாக மிரட்டினார். பயந்துபோன கனடா அரசு, ஒருபக்கம் அமெரிக்காவை பழிக்குப் பழி வாங்க நாங்களும் வரி விதிப்போம் என்று சொல்லிக்கொண்டே, மறுபக்கம், உடனடியாக எல்லை பாதுகாப்புக்காக ஏராளம் பொருட்செலவில்…

  • கனடாவில் இடம் பெறும் நிதி மோசடி தொடர்பில் எச்சரிக்கை

    கனடாவில் இடம் பெறும் நிதி மோசடி தொடர்பில் எச்சரிக்கை

    கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் இடம்பெறும் நிதி மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண போலீசார் இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மோசடி சம்பவத்தில் நபர் ஒருவர் சுமார் 20,000 டாலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்திற்குமான கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறி, பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உத்தரவாதம் அளித்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் வங்கியில் இருக்கும் பணத்தை நம்பிக்கை நிதியம் ஒன்றில் வாய்ப்பு செய்வதாக கூறி…