Category: கனடா செய்திகள்
-
விமானப் போக்குவரத்து கனடாவில் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு
கனடாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த புயலுக்கு எதிராக பல நாட்களாக முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கிரேட்டர் டொரொன்டோ விமான அதிகாரசபை (GTAA) பேச்சாளர் எரிக்கா வெல்லா தெரிவித்துள்ளார் பனிப்பொழிவு ஏற்பட்டதும் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு தங்கள் விமானப் பயண ஏற்பாடுகள்…
-
கனடாவின் சில பகுதிகளில் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை
கனடாவின் சில பகுதிகளில் கடுமையான குளிர் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மேற்குக் கனடா மற்றும் பகுதியில் இவ்வாறு கடுமையான குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மறை 30 பாகை செல்சியஸ் முதல் மறை 50 பாகை செல்சியஸ் வரையில் கடுமையான குளிர் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. கல்கரி, எட்மோன்டன், றெனினா, சஸ்காடூன், வின்னிபெக் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது
-
கனடாவில் பெண்ணைத் தாக்கி வாகன கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடும் பொலிஸார்
கனடாவில் பெண் ஒருவரை தாக்கி கார் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீசார தேடி வருகின்றனர். பிரம்டன் பகுதியில் பெண் ஒருவர் பயணம் செய்த வாகனத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயுத முனையில் இந்த பெண் அச்சுறுத்தப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பேர்சிடிஸ் பென்ஸ் ரக வாகனமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தின் போது குறித்த பெண் சிறு காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் தொடர்பில்…
-
கனடாவின் காலநிலை குறித்து வார இறுதியில் வெளியிடப்பட்ட எதிர்வுகூறல்
எதிர்வரும் வார இறுதி நாட்களில் கனடாவின் ரொறன்ரோவில் நிலவக்கூடிய காலநிலை குறித்து எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் ரொறன்ரோவில் சுமார் 30 சென்டிமீற்றர் வரையில் பனிப்பொழிவு நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மதிய வேளைகளில் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
-
தபால் விநியோகம் கனடாவின் சில பகுதிகளில் இடைநிறுத்தம்
கனடாவின் சில பகுதிகளில் தபால் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஒன்றாரியோ மற்றும் கியுபெக் ஆகிய மாகாணங்களில் இவ்வாறு தபால் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கனடிய தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. பனிப்பொழிவு மற்றும் கடும் பனிப்புயல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தபால் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தபால்களை சேகரிப்பது மற்றும் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் காலநிலை காரணமாக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் வழமை போன்று தபால்…
-
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்காமல் விடமாட்டேன்-டிரம்ப் பிடிவாதம்
கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றவேண்டும் என்பது குறித்து தான் தீவிர ஆர்வம் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவை அமெரிக்காவை இணைப்பது குறித்து அவர் தெரிவித்துவரும் விடயங்கள் உண்மையா என்ற பொக்ஸ் நியுஸ் செய்தியாளரின் கேள்விக்கே ஆம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நாங்கள் வருடாந்தம் 200 பில்லியன்டொலரை கனடாவிடம் இழக்கின்றோம் என தெரிவித்துள்ள டிரம்ப் அது தொடர்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உண்மையாகவே கனடாவை அமெரிக்காவுடன்…
-
கனடாவில் இடம்பெறும் பாரிய மோசடி
கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் பாரியளவு மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதியவர்களை ஏமாற்றி பண மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் இந்த மோசடிகளினால் 19000 டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன. தொலைபேசி வழியாகவே அதிகளவான மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேரப்பிள்ளைகள் போன்று பேசி தங்களுக்கு ஆபத்து எனக் கூறி முதியவர்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
ட்ரம்பின் அச்சுறுத்தல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாகக் கூறும் ட்ரம்பின் அச்சுறுத்தல் உண்மையானதுதான் என்று கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார். கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்திவரும் விடயம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ட்ரம்பின் அச்சுறுத்தல் உண்மையானதுதான், அதாவது, ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக சும்மா சொல்லவில்லை என்கிறார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ. பழங்காலத்தில் வலிமையான மன்னர்கள் மற்ற நாடுகளைப் பிடிக்கும் ஆசையுடன் போருக்குப் புறப்பட்டதுபோல, அல்லது கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தானியா பல நாடுகளை…