Category: கனடா செய்திகள்

  • கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகளில் 8 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மாற்றம்.

    கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகளில் 8 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மாற்றம்.

    கனடாவில் எட்டு ஆண்டுகளின் பின்னர் உணவுப் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் முதல் தடவையாக உணவுப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஜனவரி மாத்தத்தில் ஒட்டு மொத்த பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது. எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளது.

  • துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கனடாவில் 7வயது சிறுவன் காயம்

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கனடாவில் 7வயது சிறுவன் காயம்

    கனடாவில் 7வயதான சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளான். கனடாவின் லண்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. லண்டனின் பினான்சார்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு உள்ளேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தவறுதலாக துப்பாக்கி வெடித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 44 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் சட்டவிரோதமான முறையில் ஆயுதம் வைத்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக…

  • தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கனடிய மரபுரிமைகள் அமைச்சர் அறிவிப்பு

    தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கனடிய மரபுரிமைகள் அமைச்சர் அறிவிப்பு

    கனடாவின் மரபுரிமைகள் அமைச்சர் பெஸ்கல் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன. கனடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கூடுதல் நேரத்தை குடும்பத்துடன் கழிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பெஸ்கால் லிபரல் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • மொன்றியலில் பனிப்பொழிவை அகற்றுவதற்கு எட்டு நாட்கள் தேவை என அறிவிப்பு

    மொன்றியலில் பனிப்பொழிவை அகற்றுவதற்கு எட்டு நாட்கள் தேவை என அறிவிப்பு

    கனடாவின் மொன்றியலில் பனிப்பொழிவை அகற்றுவதற்கு எட்டு நாட்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர நிர்வாகம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களில் இரண்டு தடவைகள் பாரிய பனிப்புயல் நகரை தாக்கி இருந்தது. இதனால் நகரத்தின் மீது சுமார் 70 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவினை அகற்றுவதற்கு சுமார் எட்டு நாட்கள் வரையில் தேவைப்படும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பனிப்பொழிவு காரணமாக வீதி போக்குவரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்…

  • ரொறன்ரோவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்18 பேர் காயம்

    ரொறன்ரோவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்18 பேர் காயம்

    கனடாவின் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் விமானமொன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் பதினெட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பியர்சன் விமான நிலையத்தின் ஓடு பாதையில் தரையிறங்கிய போது விமானம் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. விமான நிலையப் பகுதிகளில் பலத்த காற்று வீசியதாகவும் கடுமையான பனிப்பொழிவு நிலைமை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட 80 பேர் பயணம்…

  • கனடாவில் ஏற்பட்ட  தீ விபத்தில் 12 பேர் காயம்.

    கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயம்.

    கனடாவின் டொரொண்டோவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று முன்தினம் பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த அடுக்கு மாடிக்குடியிருப்பின் 6 ஆவது மாடியில் இத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படைவீரர்கள் மற்றும் பொலிஸார் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தவர்களை மீட்டுள்ளதுடன் தீப்பரவலையும் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இத்தீவிபத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

  • கனடாவில் பனி உந்தி விபத்தில் ஒருவர் உயிர் இழப்பு

    கனடாவில் பனி உந்தி விபத்தில் ஒருவர் உயிர் இழப்பு

    கனடாவில் ஸ்னோவ் மொபைல் அல்லது பனி உந்தி விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 55 வயதான நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. டர்ஹம் பகுதியில் புரொக் என்னும் இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மற்றுமொரு பனி உந்தி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பின்னால் சென்ற பனி உந்தி மோதியதில் குறித்த நபர் வீசி எறியப்பட்டதாகவும் அதனால் பலத்த காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த உயிர்காப்பு பணியாளர்கள் அவசர…

  • டொரன்டோவில் இடம் பெற்ற கொலையுடன் தொடர்புடைய நபரை தேடும் போலீசார்

    டொரன்டோவில் இடம் பெற்ற கொலையுடன் தொடர்புடைய நபரை தேடும் போலீசார்

    கனடாவின் டொரன்டோவில் இடம் பெற்ற படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஸர்பருன் மற்றும் குயின் வீதிகளுக்கு அருகாமையில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 43 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார். இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ரொபர்ட்சன் பெரி என்ற 24 வயதான நபரை போலீசார் தேடி வருகின்றனர். குறித்த நபருக்கு எதிராக நாடு தழுவிய அடிப்படையில் பிடிவிராந்து உத்தரவு…

  • நாய் கடிக்கு இலக்ககி கனடாவில் சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

    நாய் கடிக்கு இலக்ககி கனடாவில் சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

    கனடாவில் நாய் கடிக்கு இலக்கான சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் எட்மாண்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. 14 வயதான சிறுவனே இவ்வாறு நாய் கடிக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளார். என்ட்விஸ்டல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த சிறுவன் உலங்கு வானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நாயை வளர்த்த நபர் போலீசாரிடம் சரணடைந்தார் என தெரிவிக்கப்படுகிறது.  

  • கனடாவில்  தேசிய கொடியை பனி படர்ந்த ஏரியில் உருவாக்கிய சிரேஸ்ட பிரஜைகள்

    கனடாவில் தேசிய கொடியை பனி படர்ந்த ஏரியில் உருவாக்கிய சிரேஸ்ட பிரஜைகள்

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சில சிரேஷ்ட பிரஜைகள் பனி படர்ந்து உறைந்த ஏரியின் மேல் பாரிய அளவிலான தேசியக்கொடியினை வடிவமைத்துள்ளனர். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் முயற்சி செய்து இந்த தேசிய கொடியின் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கெலோனாவின் ஹாலிடே பாக் பகுதியில் வசிப்பவர்கள் இந்த கொடியை வடிவமைத்துள்ளனர். தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கொடி நாளை முன்னிட்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் பல்வேறு…