Category: கனடா செய்திகள்
-
கனடாவின் இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பு நடைமுறையை ஒத்தி வைக்கும் ட்ரம்ப்
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதை தொடர்ந்து கனடா மற்றும் மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 2ஆம் திகதி வரை அமெரிக்காவில் இருந்து…
-
டொரொண்டோ ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு கட்டிடங்கள் முற்றாக தீக்கிரை
டொரொண்டோ யோர்க்வில் (Yorkville) பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும், பல கட்டிடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Scollard Street-ல் அமைந்துள்ள ஒரு கட்டடத்திலேயே அதிகாலை 4:30 மணிக்கு தீ ஆரம்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டிடம் புனரமைக்கப்பட்டு வந்த நிலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தீ வேகமாக அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு பரவியது. தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் இன்னும்…
-
கனடாவில் சம்பள உயர்வு குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனடாவின் மத்திய அரசு ஏப்ரல் 1 முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 17.75 டொலர்களாக உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தற்போது உள்ள 17.40 டொலர்களாக செலுத்தும் குறைந்தபட்ச ஊதியத்தை விட 2.4% அதிகரிப்பு ஆகும். மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் சம்பளம் வாழ்க்கைச் செலவுடன் ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பகுதி நேரம், தற்காலிக வேலைகள் மற்றும் குறைந்த ஊதியத்தில் உள்ள பணியாளர்களுக்கு இது நன்மை…
-
மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அதிகாரிகள் கனடாவைச் சேர்ந்த 25 பேரை கைது
பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அதிகாரிகள் கனடாவைச் சேர்ந்த 25 பேரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதானவர்களில் அதிகமானவர்கள் Montreal பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்தமை (Grandparents Scam) தொடர்பாக கைது செய்துள்ளனர். ந்த மோசடியில் 21 மில்லியன் டொலருக்கும் மேல் களவாடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மொன்றியல் (Montreal) அருகிலுள்ள பொயின்டெ கிளெரி என்ட் வாடிவில் டொரியா (Pointe-Claire & Vaudreuil-Dorion) பகுதிகளில் உள்ள கால்செண்டர்களில் இருந்து…
-
டொரோண்டோ பெரும்பாக பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
டொரோண்டோ பெரும்பாக பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் காரணமாக நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம், மற்றும் இயற்கை உறைபனி மேற்பரப்புகளில் நுழைய வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களம் ஒரு சிறப்பு வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மழை மற்றும் மிதமான வெப்பநிலைகள் காரணமாக நகரின் சில பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது. தேசிய வானிலை நிறுவனத்தின் தகவலின்படி, செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை 15 முதல் 25…
-
அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து ஒருபோதும் பின் வாங்க போவதில்லை என கனடா திட்டவட்டம்
அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து ஒருபோதும் பின் வாங்க போவதில்லை என கனடா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜன.,20ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரியை விதிக்கும் உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின்…
-
வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து கனடாவில் எச்சரிக்கை
கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஹமில்டன் பகுதியில் நோய்த் தொற்றுக்கு இலக்கான ஒருவர் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஹமில்டன் பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் பதிவான முதல் வௌவால் ரேபிஸ் தொற்று இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது. வௌவால்கள் மற்றும் ஏனைய விலங்குகளின் அருகாமைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சில விலங்குகளின் ஊடாக இந்த ரேபீஸ் வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரேபீஸ் தொற்றினால்…
-
அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு இனி அதிக வரி விதிப்பு
சீனா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அமெரிக்கா-கனடா வர்த்தக உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக, கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மார்ச் 4ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் வரி…
-
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் திங்கட்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் அதிகாலை 5:02 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது முதலில் 4.6 ரிக்டர் அளவிலாக பதிவு செய்யப்பட்டது, பின்னர் 4.1 ஆக திருத்தப்பட்டது. விக்டோரியா, வாங்கூவர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை எனவும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த…
-
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ட்ரம்ப் முயற்சி
மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடா நாட்டை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து மன்னர் சார்லசிடமே பேசுவது என ட்ரூடோ முடிவு செய்துள்ளார். மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட மொத்தம் 15 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும். ஆக, கனடாவின் தலைவரும் மன்னர் சார்லஸ்தான். இந்நிலையில், மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே…