Category: உலக செய்திகள்
-
சவுதி சென்ற அமெரிக்க அதிகாரி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை
உக்ரேனில் மொஸ்கோவின் ஏறக்குறைய மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்ய அதிகாரிகளுடன் எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திங்களன்று சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் பேசி, போர் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக பலமுறை சபதம் செய்ததை…
-
30 பேரை பலியெடுத்த கோர விபத்து : பொலிவியாவில்
பொலிவியாவின் யோகல்லா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து, சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் 800 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
அமெரிக்காவில் திடீர் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி
அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தென்கிழக்கு மாநிலமான கென்டக்கியில் மட்டும் 7 வயது குழந்தை உட்பட எட்டு பேர் இறந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், என்று மாநில ஆளுநர் ஆண்டி பெஷியர் கூறினார். பெரும்பாலான இறப்புகள் கார்கள் அதிக நீரில் சிக்கியதால் ஏற்பட்டவை என்றும் கூறினார். எனவே மக்களே, இப்போதே சாலைகளைத் தவிர்த்து…
-
வாகனங்கள் மீது வரி விதிப்பு ட்ரம்ப் தெரிவிப்பு
வாகனங்களுக்கு வரி விதிப்பது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 2-ம் திகதி வரி விதிப்பு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக வாகனங்களுக்காக இந்த வரி அறவீடு செய்யப்பட உள்ளது. அமெரிக்காவிற்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது இந்த வரி விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறான வரி விதிப்பு மேற்கொள்ளப்படும் என்பது குறித்த சரியான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவிற்கு அதிகளவில் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில்…
-
தென் கொரியா சீனாவின் டீப்சீக்-ஐ செயலிக்கு தடை
சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை டவுன்லோட் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டீப்சீக்-இன் ஆர்1 சாட்பாட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் அதிக பயனர்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஈட்டியதோடு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை…
-
இந்தியா சென்ற மூன்றாவது விமானம் டிரம்ப் இன் நாடுகடத்தல் திட்டம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணி முன்னெடுக்கபப்ட்டுள்ள நிலையில், சட்டவிரோத குடியேறிகளுடன் மூன்றாவது விமானம் இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்க்ப்படுகின்றது. இதற்கிடையில், ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அழைத்து கொண்டு இந்தியாவுக்கு இரண்டு விமானங்கள் வந்துள்ள நிலையில், நேற்று இரவு மூன்றாவது விமானமும் வந்து இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்களுக்கு கைகளில் சங்கிலிகள் போடப்பட்டதா? அமெரிக்காவில் டிரம்ப் அரசு பதவியேற்றதில் இருந்து, சட்டவிரோதமாக குடியிருக்கும் நபர்களை நாடு கடத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 5ஆம்…
-
இஸ்ரேலிய பிரதமரின் அறிவிப்பு அமெரிக்கா வழங்கிய வெடிகுண்டுகள்
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வழங்கியுள்ள வெடிகுண்டுகள் கிடைத்துள்ள நிலையில் காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் டிரம்பின் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் ,அமெரிக்கா காசாவை அபிவிருத்தி செய்யும் டொனால்ட் டிரம்பின் திட்டத்தினை பாலஸ்தீனியர்களும், அமெரிக்காவின் சகாக்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ள போதிலும் வேறு விதமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இது உகந்த திட்டம் என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வழங்கியுள்ள வெடிகுண்டுகள் கிடைத்துள்ள நிலையில் காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும்…
-
அமெரிக்காவில் புயலால் இருளில் மூழ்கிய 39 ஆயிரம் வீடுகள்
அமெரிக்காவில் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 39 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக கனமழை பெய்ததாகவும், கென்டக்கி என்ற பகுதியில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த வெள்ள அனர்த்தத்தில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல முக்கிய சாலைகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளதாகவும், 39 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், நிலைமை இன்னும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாகவும்…
-
வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் வீடு வாங்க தடை
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு தடை வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்து வந்தனர். இந்தநிலையில் உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை…
-
ரஷ்யா உக்ரைன் போர் போர்களம் செல்லும் பிரிட்டன் படையினர்
ரஷ்யா – உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் , உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ் படையினரை போர்களத்திற்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டன் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். சமாதான உடன்படிக்கையின் படி உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ்படையினரை பயன்படுத்துவதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் (Keir Starmer) கூறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடின் , எதிர்காலத்தில் மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது அவசியம்…